சாஸ்த்திரம் பார்க்க சென்ற 28 வயது 'இளைஞன்' மீது பாலியல் துஷ்பிரயோகம்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

சாஸ்த்திரம் பார்க்க சென்ற 28 வயது 'இளைஞன்' மீது பாலியல் துஷ்பிரயோகம்..

 


பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் பரிகாரம் செய்யும் நிலையத்திற்கு சென்ற

இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

https://divaina.com/daily/index.php/pradeshiya-puwath/56751-2021-04-06-13-13-21

சோதிடம் பார்ப்பதற்காக சென்ற 28 வயதுடைய இளைஞனை சோதிடம் பார்க்கும் நபரே துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நிலையில் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அதனை தொடர்ந்து அங்கிருந்த 3 வாள்களும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட இளைஞர் பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் கனடாவில் இருந்து தனது சகோதரிக்கு நடந்துள்ள பிரச்சினை தொடர்பில் சாஸ்திரம் கேட்தற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் அந்த இளைஞன் உடனடியாக பியகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


கைது செய்ய்பட்டவர் 50 வயதுடைய திருமணமாகியவராகும். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாஸ்த்திரம் பார்க்க சென்ற 28 வயது 'இளைஞன்' மீது பாலியல் துஷ்பிரயோகம்.. சாஸ்த்திரம் பார்க்க சென்ற 28 வயது  'இளைஞன்' மீது பாலியல்   துஷ்பிரயோகம்.. Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5