ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு உள்ளதா? - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு உள்ளதா?



ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை

தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.


தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ள போதிலும், உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.


பயங்கரவாத தாக்குதலின் நடிகராக சஹ்ரான் செயற்பட்டிருக்கலாம் எனவும் சாரா என்ற நடிகை காணாமல் போயுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் கூறினார்.


இந்த நிலையில், தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.


இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவு தொடர்பிலும் Pakkam Bin-abu என்ற நபர் குறித்தும் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.


ஏப்ரல் 21 தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்கள் வௌியில் உள்ளனரா என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு உள்ளதா? ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு உள்ளதா? Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5