கொரோனா உடல்களை புதைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட இரண்டு இடங்கள்... - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனா உடல்களை புதைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட இரண்டு இடங்கள்...கொரோனா சடலங்களை புதைப்பதற்கு வடக்கு மற்றும்
 கிழக்கில் இரண்டு பகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,

கொவிட் தடுப்பு செயலணியின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது,


இதனடிப்படையில் மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய பிரதேசங்களில் அடையாளங்காணப்பட்ட இரண்டு பகுதிகளில் கொரோனா  புதைப்பதற்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,


அத்துடன், எதிர்வரும் 48 மணி நேரத்தில் கொரோனா  புதைப்பதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானி வௌியிடப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,


நீர் மட்டம் குறைவான இரு பகுதிகளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு பகுதிகளிலும் 15 மீற்றருக்கும் குறைவாகவே நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது,
கொரோனா உடல்களை புதைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட இரண்டு இடங்கள்... கொரோனா உடல்களை புதைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட இரண்டு  இடங்கள்... Reviewed by Madawala News on March 01, 2021 Rating: 5