மரணித்த ஆளுமைகளின் நினைவாக சாய்ந்தமருதில் நிகழ்வு.



மாளிகைக்காடு நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண மருதம் கலைக்கூடலின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிராந்தியத்தில் அண்மையில்

காலமான கலை, இலக்கிய, ஊடக ஆளுமைகளை நினைவு கூர்ந்து "நீத்தார் நினைவுகள்- இரங்கல் உரை நிகழ்வு" எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது ரியாளுள் ஜன்னா வித்தியாலய அரங்கில் நடைபெற உள்ளது. 


இந்நிகழ்வில் கலைச்சுடர் சக்காப் மௌலானா பற்றிய நினைவுரையை ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் கலாபூஷணம் ஏ. பீர்முகம்மட் அவர்களும், சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி பற்றிய நினைவுரையை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிரதிப்பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் மற்றும் புகழ்பெற்ற ஒலி, ஒளிபரப்பாளரும் சட்டத்தரணியுமான கவிஞர் ஏ.எம். தாஜ் ஆகியோர் நிகழ்த்துவதுடன் கலாபூஷணம் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் பற்றிய நினைப்பேருரையை இலக்கிய செயற்பாட்டாளர் நவாஸ் சௌபியும், பன்னூல் ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான வித்தகர் நூருல் ஹக் பற்றிய உரையை எழுத்தாளர் கவிஞர் சட்டத்தரணி அலறி றிபாஸ் நிகழ்த்துகிறார்.


மேலும் கவிதாயினி கலைமகள் ஹிதாயா றிஸ்வி பற்றிய நினைவுரையை எழுத்தாளர் ஜூல்பிகா செரீப் நிகழ்த்துவதுடன் கவிஞர் யூ.எல். ஆதம்பாபா தொடர்பிலான நினைவுரையை சாய்ந்தமருது பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரப் நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், இலக்கிய செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், புகழ்பெற்ற கவிஞர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மரணித்த ஆளுமைகளின் நினைவாக சாய்ந்தமருதில் நிகழ்வு. மரணித்த ஆளுமைகளின்  நினைவாக சாய்ந்தமருதில் நிகழ்வு. Reviewed by Madawala News on February 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.