இந்த கடினமான காலங்களில் எங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து செயற்பட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குவோம்.



மார்ச் 30 2020 முதல் , 2021 பிப்ரவரி 25 வரை, 333 நீண்ட 
துயரமான நாட்கள் மற்றும் 333 நீண்ட உறக்கம் இழந்த இரவுகளாக நாங்கள் கவலையில் துவழ்ந்தவர்களாக அல்லல்பட்டு அழுதோம், மன்றாடினோம்.


 எங்கள் 333 க்கும் மேற்பட்ட அப்பாவி சகோதர சகோதரிகளின் ஜனாசாக்கள் வலுக்கட்டாய எரிப்பிற்கு பழிகொடுத்து நீண்ட இழுபறிகளுக்கும், பாரிய இழப்புகளுக்கும் முகம்கொடுத்து காலதாமதமாக, நாம் இழந்திருந்த “இறந்தவர்கள் அடக்கின்ற உரிமை” மீழப்பெறுகின்ற அறிக்கை இப்போது கிடைத்திருக்கிறது. 


 இது சர்வவல்லமையுள்ள இறைவனிடம்  அழுதழுது கண்ணீர் சிந்தி சிரம்தாழ்த்தி மன்றாடிய பிரார்த்தனைகளுக்கு கிடைக்கப்பெற்ற அடைவுதான் நல்லடக்கத்துக்கான இந்த முடிவு.   இது எங்களுக்கு இறைவனால் ஏற்ப்படுத்தப்பட்ட ஒரு சோதனையும், நமது தவறுகளிலிருந்து நாம் திருத்திக்கொள்வதற்கான ஓர் எச்சரிக்கையுமாகும்.


 நம்முடைய இருதயங்களை இதமாக்குபவனும் , நம்மை அறிவூட்டி  நம்முடைய நம்பிக்கையில் உறுதியுடன் பயனிக்க பலப்படுத்துவனும் எம் ஏக இறைவனே!  இந்த நேரத்திலே எம்மை விட்டு மறைந்த எமது உறவுகளுக்காக வல்ல நாயன் "ஜன்னதுல் பிர்தௌஸ்" எனும் மேலான  சுவனத்தினை வழங்கிட எல்லாம் வல்ல அல்லாஹ்வினை பிரார்த்திப்பதோடு,  வல்ல நாயன் நம்மையும் நம் சந்ததியினரையும் தீமை மற்றும் தவறுகளிலிருந்தும், பாவச்செயல்களிலிருந்தும் பாதுகாப்பதோடு,  நம் அனைவரையும் கொடிய நெருப்பிலிருந்து பாதுகாப்பானாக...


 இந்த கடினமான காலங்களில் எங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து செயற்பட்ட  அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குவோம்.  அல்ஹம்துலில்லா, அல்ஹம்துலில்லா, அல்ஹம்துலில்லாஹ்!

 —- .   The number of long days and sleepless nights since the first forced cremation on 30th March 2020. We suffered, we wept, we plead.   This is not a victory but merely a restoration of our basic rights. This is not a gift, but one that was owed.
இந்த கடினமான காலங்களில் எங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து செயற்பட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குவோம். இந்த கடினமான காலங்களில் எங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து செயற்பட்ட  அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குவோம்.  Reviewed by Madawala News on February 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.