நண்பர்களுடன் மலையில் இரவில் கூடாரம் அமைத்து, தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மாயம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

நண்பர்களுடன் மலையில் இரவில் கூடாரம் அமைத்து, தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மாயம்.

 


பதுளை - நாரங்கல மலைத் தொடரில் நண்பர்கள் 6 பேருடன் இரவில் கூடாரம் அமைத்து, தங்கியிருந்த

இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவிசாவளையைச் சேர்ந்த அகலங்க பெரேரா என்பர இளைஞரே காணாமல்போயுள்ளார்.


இரவு 9.30 மணியளவில் மலசலக்கூடத்துக்கு சென்று வருவதாகக் கூறி சென்ற குறித்த இளைஞர் திரும்ப வரவில்லை என பொலிஸாரிடம் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை காணாமல்போயுள்ள இளைஞரை இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர்.

நண்பர்களுடன் மலையில் இரவில் கூடாரம் அமைத்து, தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மாயம். நண்பர்களுடன்  மலையில் இரவில் கூடாரம் அமைத்து,  தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மாயம். Reviewed by Madawala News on February 27, 2021 Rating: 5