கொழும்பில் இம்ரான்கானின் வாகன தொடரணியை பேஸ்புக் லைவ் கொடுத்த நபர் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொழும்பில் இம்ரான்கானின் வாகன தொடரணியை பேஸ்புக் லைவ் கொடுத்த நபர் கைது.


இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாகன வாகன தொடரணி

செய்வதை மொபைல் போனில்   பதிவு செய்த குற்றச்சாட்டில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் பொரல்லவில் நேற்று கைது செய்யப்பட்டார்.

பேஸ்புக் லைவ் கொடுப்பதற்காக  காட்சிகளை அவர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சந்தேக நபர் கொழும்பில் வசிப்பவர் மற்றும் தனியார் துறையில் இயந்திர தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


நாட்டிற்கு வருகை தரும் பிரமுகரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் அவரை தடுத்து வைத்திருந்ததாக  கூறப்படுகிறது.


பின்னர் அவர் போலீஸ் பிணையில்  விடுவிக்கப்பட்டார்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை (23) முதல் புதன்கிழமை (24) வரை இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ அரசு பயணத்தை மேற்கொண்டார். 

கொழும்பில் இம்ரான்கானின் வாகன தொடரணியை பேஸ்புக் லைவ் கொடுத்த நபர் கைது. கொழும்பில் இம்ரான்கானின் வாகன தொடரணியை பேஸ்புக் லைவ் கொடுத்த நபர் கைது. Reviewed by Madawala News on February 25, 2021 Rating: 5