குடும்பத்தினரிடம் வழங்கிய உடலை, PCR அறிக்கையின் பின் திரும்ப பெற வந்ததால் ஏற்பட்ட குழப்ப நிலை - வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.
குருணாகல் வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் உடலால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அடக்கம் செய்ய உறவினர்கள் தயாராகியுள்ளனர்.
இதன் போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் சடலம் மீளவும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மல்சிரிபுர, நீரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவராகும். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளளார். PCR பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை அறிக்கை கிடைத்த பின்னரே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் உடலை தகனம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடலை பொறுப்பெடுக்க சென்ற சுகாதார அதிகாரிகளுக்கும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
தகராறின் பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டதுடன் 175 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் இரு பாடசாலைகள், இரு முன்கல்வி பாடசாலைகள், மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.
