கொரோனா தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக அட்டாளைச்சேனை பிரகடனம்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவு கொரோனாத் தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக

பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எஸ். அகிலன் தெரிவித்தார்.


அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி ஆகிய கிராமங்களில் இது வரை 87 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதில் 02 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


இது வரையில் 02 ஆயிரத்திற்கு மேற்பட்ட பீ.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திலிருந்து 62 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், 25 தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.


கொரோனாத் தொற்று எம்மை விட்டு இன்னும் செல்லவில்லையெனவும், இவ் வாரம் மட்டும் 16 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பேணி நடந்து கொள்வதன் மூலம் எமது பிரதேசத்தில் கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கலாமெனவும் தெரிவித்தார்.


சுகாதார அதிகாரிகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும், தானாக முன்வந்து அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களைக் கேட்டுள்ளார்.


மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளும் கொரோனாத் தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக அட்டாளைச்சேனை பிரகடனம். கொரோனா தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக அட்டாளைச்சேனை பிரகடனம். Reviewed by Madawala News on January 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.