நான் ஜோசப்பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது. ஒரு தடைவை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன்.. இப்படி இருக்க, நான் அவரை கொலை செய்ததாக வீண்பழியை சுமத்தி சிறையில் அடைத்தனர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

நான் ஜோசப்பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது. ஒரு தடைவை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன்.. இப்படி இருக்க, நான் அவரை கொலை செய்ததாக வீண்பழியை சுமத்தி சிறையில் அடைத்தனர்.


பல அசிங்கங்களை நல்லாட்சி அரசாங்கம் நடாத்திய போது, அதனை கண்டு கொள்ளாதவர்கள் இன்று ஊடக தர்மம்,

சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் குரல் கொடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்ரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத தடைச் சட்டத்தினை உருவாக்கிய பிதாமக்கள் என்னை தண்டிக்க வேண்டும் மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இரட்டை முகத்தினை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


நான் ஜோசப்பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது. ஒரு தடைவ தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன் எனவும் இவ்வாறான நிலையில் அவரை கொலை செய்ததாக வீண்பழியை சுமத்தி சிறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.


ஜோசப்பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு தோல்வி அடைந்தார். விடுதலைப் புலிகள் அன்றைய காலத்தில் வெற்றிபெற்றவர்களை கொலை செய்துவிட்டு வேறு நபர்களை நியமனம் செய்தது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அது தொடர்பில் எந்தவித விசாரணைகளையும் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 கிருஷ்ணகுமார்- derana

நான் ஜோசப்பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது. ஒரு தடைவை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன்.. இப்படி இருக்க, நான் அவரை கொலை செய்ததாக வீண்பழியை சுமத்தி சிறையில் அடைத்தனர். நான் ஜோசப்பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது. ஒரு தடைவை  தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன்..  இப்படி இருக்க, நான்  அவரை கொலை செய்ததாக வீண்பழியை சுமத்தி சிறையில் அடைத்தனர். Reviewed by Madawala News on January 13, 2021 Rating: 5