நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் விசேட அறிவித்தல். - Madawala News Number 1 Tamil website from Srilanka

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் விசேட அறிவித்தல்.(யாக்கூப் பஹாத்)

 தற்போது நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருந்தும்

பொதுமக்கள் கவனயீனமாக இருப்பது ஏன் ?


உயிராபத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விட்டீர்களா ? 


உங்கள் - உயிர் பாதுகாப்பிற்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் ஒத்துழைப்பு என்ன ?


அண்மைக்கால கள ஆய்வின் படி நுளம்பு பெருக்கத்திற்கு பராமரிக்கப்படாத கிணறுகள் , குழாய்க் கிணறுகள் , பராமரிக்கப்படாத மலசலகூடங்கள் , மூடப்படாத நீர்த் தாங்கிகள் என்பன மூலகாரணமாக காணப்படுவதால் நீர் தேங்கி காணப்படும் கிணறுகள் , குழாய்க் கிணறுகள் , நீர்த் தாங்கிகள் என்பவற்றை நுளம்பு உட்புகாவண்ணம் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு கிணற்றுக்குள் பனையான் மீன்களை போடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் . 


ஒரு கிணற்றில் இருந்து உற்பத்தியாகும் நுளம்புகள் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை உருவாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள் . 


நாங்கள் நோயாளிகள் உருவாகுவதற்கு காரணமாக அமையக் கூடாது தற்போது உங்கள் வீடுகளுக்கு வருகை தரும் டெங்கு கண்காணிப்பு குழுவினர் டெங்கு குடம்பிகளை அடையாளம் கண்டால் உங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் உங்கள் உயிரை பாதுகாப்பதற்கு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீங்கள் ஒத்துழைப்பு வழங்கி உங்களையும் உங்கள் குழந்தை செல்வங்களையும் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் . 


உங்களின் கவனயினத்தால் உங்கள் குழந்தைச் செல்வங்களின் மரணத்திற்கு நீங்களே காரணமாக அமையக் கூடாது என்பதை கண்டிப்பாக அறியத்தருகின்றோம் . 


டெங்கு ஒழிப்புக்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் நிந்தவூர் பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் . 


இவ்வண்ணம் சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நிந்தவூர்.


Yakoob fahath 

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் விசேட அறிவித்தல்.  நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் விசேட அறிவித்தல். Reviewed by Madawala News on January 13, 2021 Rating: 5