கிண்ணியா மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்...


ஹஸ்பர் ஏ ஹலீம்_

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவின் மாஞ்சோலை கிராம

உத்தியோகத்தர பிரிவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து சுகாதாரத்துறையினரின் அறவுறுத்தல்களுக்கிணங்க குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவை தனிமைப்படுத்தல் பிரிவாக  பிரபடனப்படுத்த அவசியமான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.


 திருகோணமலை மாவட்ட செயலகத்தில்(12) நடைபெற்ற கொவிட் 19 கூட்டத்தின்போதே இத்தீர்மானம் மாவட்ட கொவிட் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இக்கிராம உத்தியோகத்தர்பிரிவை தனிமைப்படுத்துவதன் மூலம் கொவிட் தொற்று ஏனைய பிரதேசங்களுக்கு  வியாபிக்காவண்ணம் கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறையினர் இக்கூட்டத்தின் போது தெரிவித்ததாகவும் அதற்கிணங்க குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.



கிண்ணியா மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்... கிண்ணியா மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்... Reviewed by Madawala News on January 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.