கட்டாயம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும் ..



அடக்கம் செய்வது பற்றி நான் அல் குர்ஆன் கொடர்பில் நான் கூறிய கருத்து தவறு என இஸ்லாமிய மத தலைவர்களோ அல்லது துறைசார் வல்லுனர்களோ இதுவரை ஆதாரபூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வாவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார் 


மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


முஸ்லிம்களின் உடல்கள் கட்டாயம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும். நான் கூறிய கருத்துத் தவறு என இதுரையில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஆதாரத்துடன் இதுவரை மறுக்கவில்லை.ஒரு சிலர் சமூகவலைகளில் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஏற்க முடியாது.


கொவிட்-19 வைரஸ் விவகாரத்தில் அரசியல், உள உணர்வுகள் ஆகியவற்றை கொண்டு தீர்மானம் எடுக்க முடியாது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும். என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் தற்போது கிடையாது என அவர் குறிப்பிட்டார்.


கட்டாயம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும் ..  கட்டாயம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும் .. Reviewed by Madawala News on January 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.