VIDEO : உங்களது வாகனங்கள் காணாமல் போயிருந்தால் அவை இவற்றில் உள்ளனவா?

 (செ.தேன்மொழி)

வாடகை அடிப்படையில் வாகனங்களை விநியாகம் செய்துவரும் நிறுவனங்களில்,

போலி ஆவணங்களை காண்பித்து வாகனங்களை பெற்று பின்னர், அவற்றின் இலக்கத்தகடு மற்றும் என்ஜின் இலக்கத்தை மாற்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்தமை, அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வாடகை அடிப்படையில் வாகனங்களை விநியோகம் செய்துவரும் நிறுவனங்களில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வாகனங்களை பெற்றுக்கொண்டு அவற்றின் இலக்கத்தகடு மற்றும் எஞ்ஜின் இலங்கங்களை மாற்றி அதனை விற்பனை செய்வதற்கு அவசியமான போலி ஆவணங்களையும் தயாரித்து மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் முல்லேரியா பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

முல்லேரியா பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைககளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யக்கல மற்றும் மீரிகம ஆகிய பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 16 கார்களும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.

VIDEO : https://www.facebook.com/MadawalaNewsWeb/posts/3698293116923660

இதேவேளை, சந்தேக நபர்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்தமை தொடர்பில் கம்பஹா – மகலெகொட பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு வாடகை அடிப்படையில் வாகனங்களை விநியோகம் செய்துவரும் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை கொடுத்து அவை காணாமல் போயிருந்தால் வாகன உரிமையாளர்கள், முல்லேரியா பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தங்களது வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பபட்ட வாகனங்களில் உள்ளனவா என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி : Metro --

VIDEO : உங்களது வாகனங்கள் காணாமல் போயிருந்தால் அவை இவற்றில் உள்ளனவா? VIDEO : உங்களது வாகனங்கள் காணாமல் போயிருந்தால் அவை இவற்றில் உள்ளனவா? Reviewed by Madawala News on January 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.