முதல்முறையாக கொரில்லா குரங்களுக்கு கொரோனா தொற்று உறுதி.



 அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா
 குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்ககானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.



அமெரிக்காவின் சான்டிகோவில் உள்ள விலங்குகளுக்கான பூங்காவில் பொது மக்கள் செல்ல கடந்த டிசம்பர் 6ம் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கடந்த வாரம் இருமல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கொரில்லா குரங்குகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு குரங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அறிகுறி இல்லாத கொரோனா வைரஸ் பூங்கா ஊழியர்களிடம் இருந்து கொரில்லா குரங்குகளுக்கு பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்முறையாக கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக கொரில்லா குரங்களுக்கு கொரோனா தொற்று உறுதி. முதல்முறையாக கொரில்லா குரங்களுக்கு கொரோனா  தொற்று உறுதி. Reviewed by Madawala News on January 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.