முதல் தொடர்பில் இருந்த சுமார் 300 பேரை சுய தனிமையில் இருக்குமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரினார்.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன்,

சுமார் 300 பேர் வரை முதல்  தொடர்பில் ( First Contact)  இருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

http://www.aruna.lk/%E0%

கடந்த சில தினங்களாக பல்வேறு கலந்துரையாடல்களில் அமைச்சர் பங்கேற்றிருந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 


அமைச்சின் செயலாளர்,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் அமைச்சருடனான கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர். 


எனவே, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை சுய தனிமையில் ஈடுபடுமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார்.  


அமைச்சரின் கணவர் மற்றும் மகள் ஆகியோருக்கு முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனை மூலம் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

முதல் தொடர்பில் இருந்த சுமார் 300 பேரை சுய தனிமையில் இருக்குமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரினார். முதல் தொடர்பில் இருந்த சுமார்  300 பேரை  சுய தனிமையில் இருக்குமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரினார். Reviewed by Madawala News on January 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.