தேங்காய்களை திருடிய மற்றும் ஒரு நபர் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை.



காலி ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உத்தியோகபூர்வ 
இல்லத்திலிருந்து தேங்காய்களை திருடியதற்காக கைதான நபர் 200,000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


செவ்வாய்க்கிழமை அவ்வீட்டின் வீட்டின் வளாகத்திற்குள் உள்ள மரத்தில் இருந்து 21 தேங்காய்களை சந்தேக நபர் திருடியதாக தெரிவிக்க படுகிறது.


நேற்று (20) காலி தலைமை நீதவான் ஹர்ஷனா கெகுனவெலா முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


சந்தேக நபர் காலியில் உள்ள கந்தேவாட்டில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தேங்காய்களை திருடிய நிலையில் மூன்று ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


பின்னர் அதிகாரிகள் தேங்காயுடன் அந்த நபரை காலி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபர் 2021 மே 04 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஏற்கனவே தேங்காயை திருடிய நபர் ஒருவர் ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலையான செய்தி நேற்று வெளியாகியிருந்த நிலையில் தற்போது இவ்வாறான ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தேங்காய்களை திருடிய மற்றும் ஒரு நபர் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை. தேங்காய்களை திருடிய மற்றும் ஒரு நபர்  2 இலட்சம் ரூபா பிணையில்  விடுதலை. Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.