சட்டத்தரணிகள் 150 பேரை பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்து கொள்வதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.



சட்டத்தரணிகள் 150 பேரை பொலிஸ் பரிசோதகர்களாக நான் 
இணைத்துக் கொள்ளப் போவதாக தெரிவிக்கப்படும் செய்திக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சட்டத்தரணிகளை பொலிஸுக்கு இணைத்துக்கொள்ளும் அதிகாரமும் எனக்கு இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று (19) செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண, சட்டத்தரணிகள் 150 பேர் பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்துக் கொள்ளப் போவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.


மொழி அடிப்படையில் இணைத்துக் கொள்ளும்போது சிங்கள பிரதேசங்களுக்கு சிங்கள மொழி தெரிந்தவர்களும் சிறுபான்மை மக்கள் இருக்கும் பிரதேசங்களுக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களும் இணைத்துக்கொள்ளும் நிலைமை ஏற்படும் என்றே நினைக்கிறேன். ஆனால் அனைத்து பிரதேசங்களுக்கும் தமிழ், சிங்கள மொழியில் திறமையானவர்களை நியமிப்பதே நல்லது.

அத்துடன் பொலிஸ் திணைக்களத்துக்கு சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் நீதித்துறைக்கு எவ்வாறான அதிகாரம் இருக்கின்றது என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், சட்டத்தரணிகளை பொலிஸ் திணைக்களத்துக்கு இணைத்துக்கொள்ளும் திட்டத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு சட்டத்தரணிகளைக் கொண்டு மேற்கொள்ளும்போது மக்களுக்கு இலகுவில் அவர்களின் சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்ற யோசனையையே நான் முன்வைத்தேன்.

மாறாக அவ்வாறு இணைத்துக்கொள்ளும் எந்த அதிகாரமும் எனக்கு இல்லை. நான் தெரிவிக்காத ஒருவிடயத்தை சிலர் தெரிவித்து, அதனை அடிப்படையாக்கொண்டு எம்மை விமர்சிக்கின்றனர்.
அத்துடன் சட்டத்தரணிகளை பொலிஸுக்கு இணைத்துக்கொள்வதாக இருந்தால், பொலிஸுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சினாலே மேற்கொள்ள வேண்டும். அதனால் சட்டத்தரணிகளை பொலிஸுக்கு இணைத்துக் கொள்ளப் போவதாக தெரிவிக்கப்படும் விடயத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
Metro
சட்டத்தரணிகள் 150 பேரை பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்து கொள்வதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சட்டத்தரணிகள் 150 பேரை பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்து கொள்வதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. Reviewed by Madawala News on January 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.