தன்னை நிரூபிக்கப் போராடும் சிராஸ்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

தன்னை நிரூபிக்கப் போராடும் சிராஸ்..குறிப்பு: Score Board இல் மாத்திரமல்ல, ஆட்டக் களத்திலேயும் உண்மையான
 திறமை வெளிப்படும்!

Mohamed Shiraz......
வேகப்பந்து வீச்சாளன்!
Galle Gladiators அணிக்காக விளையாடும் சிறுபான்மையினத்தவன்!

உள்ளக போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினாலும், தேசிய அணியில் இடம் கிடைக்காத சாபத்துக்கான பல சிறுபான்மையினன்களில் ஒருவன்!

இவன் சாதித்தால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் சாதித்தது போன்ற பெருமை அனைவருக்கும் கிடைக்கும் என்பது நிதர்சன உண்மை!


Galle Gladiators இன் முதலாவது போட்டியில் சிராஸ் களமிறங்குகிறார்....

 சர்வதேசமே காண களமிறங்கும் சிராஸின் முதல் போட்டி..
Pressure....
Tension...

பந்து வீச்சு நினைத்தது போல அமையவில்லை!
எதிரணியினர் அடித்துத் துவைக்கின்றனர்...
3 ஓவர்களில் 38 ஓட்டங்கள்...

நான்காம் ஓவர் போட விடப்படவில்லை!
அவ்வளவு அடி!!

முதல் போட்டி என்றபடியால் தலை தப்புகிறது! இரண்டாம் போட்டியில் விளையாட வாய்ப்புப் பெறுகிறார்!

மழை காரணமாக போட்டி ஐந்து ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப் படுகிறது!

Colombo Kings அணியினர் ஐந்து ஓவர்களில் 96 ஓட்டங்களை விளாசித் தள்ளுகின்றனர்!

பாகிஸ்தானின் நட்சத்திரம் Mohamed Amir ஓவருக்கு 23 விகிதம் ஓட்டங்களையும், இலங்கை வீரர் AM Fernando ஒரு ஓவருக்கு 26 ஓட்டங்களையும் வழங்குகையில் சிராஸ் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் 11 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்படுகிறது!

சிறப்பாக பந்து வீசினாலும், ஒரு ஓவர் மாத்திரமே கிடைக்கிறது!

இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் கலாய்க்கப் படுகிறார் சிராஸ்!

ஒரு சிலர் அவரை குறிப்பிட்டு Mention பண்ணியே நக்கலடித்தனர்!

தனது திறமையை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது நேற்று  நடந்த Kandy Tuskers உடனான அடுத்த போட்டியில்!

Kandy Tuskers அணியினர் ஐந்து ஓவர்களில் 46 ஓட்டங்கள் எனும் ஸ்திர நிலையில் இருக்கும் போது, Power Play இன் ஆறாவது ஓவர் சிராஸுக்கு கொடுக்கப் படுகிறது!

ஐந்தாவது ஓவரில் நான்காம் ஐந்தாம் பந்தில் முறையே 6,4 ஓட்டங்களை விளாசி Form ஆகி விட்டு கடைசி பந்தில் சிங்கள் அடித்து Strike இல் நிற்கிறார் Kusal Mendis!

மறுபடியும் சிராஸின் முகத்தில் Tension! Pressure!
ஓடி வந்து வீசுகிறார் முதல் பந்தை...
அடிக்கிறார் Kusal Mendis...
ஓடுகிறது பந்து பௌண்டரியை நோக்கி...
அதேவேளை,
அம்பயர் நீட்டுகிறார் ஒரு கையை....
No Ball..... Free Hit!!!!!!!

ஓடி வந்து வீசுகிறார்..... Wide!!!!
ஏமாற்றம்!!

முதலாவது பந்தையே மூன்றாவது முறையாக வீசுகிறார்......
Kusal Mendis ஓங்கி அடிக்க.... பந்து பறக்கிறது... Sixxxerrrrrrr!!

ஒரேயொரு பந்தில் 12 ஓட்டங்கள்....
சிராஸின் முகத்தில் டென்சனோ டென்சன்.....

இரண்டாம் பந்து வீசப்படுகின்றது....
குசால் தூக்கி அடிக்க....
இன்னொரு Sixxxerrrrrrr.....

அந்த ஓவரில் மொத்தமாக 21 ஓட்டங்கள் அடிக்கப்பட,
சிராஸ் ஒரு ஓரமாக அனுப்பி வைக்கப் படுகிறார்!!!

மறுபடியும் சிராஸ் புராணம் Online இல் தொடர, மறுபக்கம் Kandy Tuskers விளாசுவதும் தொடர்கிறது!!

15 ஓவர்களில், 142/3....

16 ஆவது ஓவரில், மீண்டும் சிராஸ்!!!!!!

மீண்டும் எதிர்பார்ப்பு.....

முதல் பந்து.... விரண்டோடுகிறது.... பௌண்டரிக்கு......

இரண்டாது பந்திலாவது Comeback கிடைக்குமா என நினைக்கையில்...
பந்து எல்லைக் கோட்டுப் பக்கம் விரைகிறது... பௌண்டரி....

மூன்றாம் பந்து.... Wide.... பின்னர் Single...

நான்காம் பந்தில்.... No Ball உடன் 2 runs
.. Free Hit

பௌண்டரி.......

இறுதியில்.... அந்த ஓவரில் 17 ஓட்டங்கள்!!!!!!

மொத்தமாக இரண்டு ஓவர்களில், 38 ஓட்டங்கள் வாரி வழங்கியே விட்டார்!!
வாசிக்கும் உங்களுக்கு கடுப்பு வந்திருக்கும் என்பது நிச்சயம்!
இவ்வளவு வாசித்து விட்டும் Positive ஆக எதுவுமே இல்லையே... என்று நினைக்கலாம்!

சிராஸின் Career இத்துடனேயே முடிந்திருப்பதற்கான வாய்ப்பும் இருந்திருக்கலாம், அதன் பின்னர் இவ்வளவு காலம் போராடி திறமையை நிரூபிக்க ஒரு களம் கிடைத்தும் சாதிக்க முடியவில்லையே என சிராஸும் கவலைப் பட்டிருக்கலாம்,
அணித்தலைவர் Shahid Afridi 18 ஆவது ஓவரை வேறொருவருக்கு வழங்கி இருந்தால்!!!!!

ஒட்டுமொத்த உலகே நம்பிக்கை வைக்காத போதும், அப்ரிடி சிராஸின் திறமை மீது நம்பிக்கை வைத்து பந்தை கையில் கொடுக்கிறார்!

Commentary செய்வோருக்கு அதிர்ச்சி!
ஏன், பார்வையாளருக்கும் தான்!

முரட்டு Form இல் Brendan Taylor...
24 பந்தில் 40 ஓட்டங்களுடன் களத்தில்!

விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்று இந்த ஓவரை இறுதி ஓவர் போல நினைத்து 18 ஆவது ஓவரை வீசுகிறார்....
டென்சனில் இரண்டு Wide வீசப்பட்டாலும் அந்த ஓவரில் வெறும் ஏழே ஏழு ஓட்டங்களே கொடுக்கிறார்!

Mind Blowing!
What a Comeback!

இரண்டு ஓவர்களிலேயே ஓரமாக்கப் பட வேண்டியவரெனக் கருதப்பட்டவர்...
ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசுகிறார்!!!!

பொதுவாக கடைசி ஓவரை அனைத்து Batsman உம் விளாசித் தள்ளுவார்கள்!
Bowler பாவமாக இருக்கும்!

கிடைத்த அந்த ஓவரை மீண்டும் மிகச் சிறப்பாக தன்னம்பிக்கையுடன் வீசுகிறார்!

மீண்டும் ஏழே ஏழு ஓட்டங்கள், ஒரு விக்கட்டுடன்!

"Impressive Death Bowling from Shiraz" என்று Commentators கத்த ஆரம்பித்து விட்டனர்!

உண்மையில் சிராஸின் தன்னம்பிக்கை தான் இங்கு வெற்றி பெற்றது!

முதல் இரண்டு ஓவர்களுக்கும் 38 ஓட்டங்கள்!

கடைசி இரண்டு ஓவர்களுக்கும் 14 ஓட்டங்கள்... அதுவும் Death Overs இல்!!!

அடுத்த போட்டிகளில் எவ்வாறு விளையாடுவாரெனத் தெரியாது....

ஆனால் நேற்று ஆடிய ஆட்டம்..... வேற லெவல்!

தன்னை நிரூபிக்க போராடினார்!
What an Impressive Comeback!
வெறித்தனம்!

சிராஸ் சற்று தன்னம்பிக்கையுடன் பந்து வீச ஆரம்பித்து விட்டாரென நினைக்கிறேன்!

தொடர்ந்து சிறப்பாக விளையாடி, இலங்கையணியில் நிலையான இடத்தைப் பிடித்து, நாட்டுக்கு பெருமை சேர்க்க இறைவனை வேண்டுகிறேன்!

பி.கு: இறுதி இரண்டு ஓவர்களையும் வீச அழைக்கப்பட்ட வேளையில் சிராஸின் பதற்றத்தைத் தணிக்க, 
சிராஸின் உள்ளூர் கழகமான BRC கழகத்தின் தலைவரும் Galle Gladiators வீரருமான Banuka Rajapaksha மிக்கப் பிராயச்சித்தப் பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது!

By: Ifham Aslam

தன்னை நிரூபிக்கப் போராடும் சிராஸ்.. தன்னை நிரூபிக்கப் போராடும் சிராஸ்.. Reviewed by Madawala News on December 01, 2020 Rating: 5