உலக சுகாதார ஸ்தானத்தின் கூற்றுப் படி நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது



கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலை களைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.



தொடர்ந்தும் பாடசாலைகளை மூடிவிட முடியாது ஏனென் றால் உலக சுகாதார ஸ்தானத்தின் கூற்றுப் படி நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.


அத்துடன் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு கொ ரோனா தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளைத் திறந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.


பாடசாலைகளைத் தொடர்ந்தும் நடத்த அனைத்து தரப் பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க பெற்றோர் , சுகாதாரப் பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினரும் தங்களது பொறு ப்புகளைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித் துள்ளது.


பெற்றோர்களின் பொறுப்பு 

தனிமைப்படுத்தல் பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் இது பெற்றோர்களின் பொறுப்பாகும்.



கல்வி அதிகாரிகளின் பொறுப்பு 

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல் பின்பற்ற நட வடிக்கைகளை மேற்கொள்ளுதல், கை கழுவுதல், முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு இவை தொடர்ந்தும் மேற்கொள்ளப் படுகின்றதா என கண்காணிக்க வேண்டும்.


சுகாதார அதிகாரிகளின் பொறுப்பு

 சுகாதார அதிகாரிகளின் பொறுப்பு இவை தொடர்ந்து சரியான முறையில் செயற்படுகின்றதா என கண் காணிக்கவேண்டும்  என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே ‍கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தானத்தின் கூற்றுப் படி நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது உலக சுகாதார ஸ்தானத்தின் கூற்றுப் படி நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது Reviewed by Madawala News on December 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.