காற்று மற்றும் மழை காலங்களில் ஓதவேண்டிய சந்தர்ப்ப துஆக்கள்.


🔮 *காற்று மற்றும் மழை காலங்களில் ஓதவேண்டிய சந்தர்ப்ப துஆக்கள்*

🤲 *வேகமாக காற்று வீசும் போது செய்ய வேண்டிய பிரார்த்தனை1⃣* 


 *اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ خَيْرَها، وَخَيْرَ ما فِيها، وَخَيْرَ ما أُرْسِلَتْ به، وَأَعُوذُ بكَ مِن شَرِّها، وَشَرِّ ما فِيها، وَشَرِّ ما أُرْسِلَتْ بِهِ*


*அல்லாஹ்வே! இதன் நலவையும் இதிலுள்ளவையின் நலவையும் இது எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறதோ அதன் நலவையும் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீங்கிலிருந்தும் இதிலுள்ளவையின் தீங்கிலிருந்தும் இது எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டி, ஒதுங்கிக் கொள்கிறேன்.*


(ஸஹீஹ் முஸ்லிம் 899)



🤲 *காற்று வேகமாக வீசும் போது ஓதுவதற்கு இன்னொரு பிரார்த்தனை2⃣*


 *«اللهمَّ! إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا أُمِرَتْ به، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُمِرَتْ بِهِ»*


*அல்லாஹ்வே! இதற்கு (இப்புயலிற்கு உன்னால்) என்ன கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதோ அதன் நலவை உன்னிடமே கேட்கிறேன். மேலும் இதற்கு (உன்னால்) கட்டளை பிறப்பிக்கப்பட்டிருப்பதின் தீங்கில் இருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டி ஒதுங்கிக் கொள்கிறேன்.*


____

📋 இப்னு ஹஜர், அல்பானி, வாதிஈ மற்றும் பல ஹதீஸ் துறை வல்லுனர்களான இந்த ஹதீதை ஆதாரபூர்வமானது என்று உறுதி செய்துள்ளார்கள்.

 الأدب المفرد (٧١٧)، الطبراني في الدعاء (٢/١٢٥٤) عن أنس. 

الصحيح المسند (٧٤): صحيح. وصحيح الأدب المفرد (٥٥٥).



🌪 *காற்று வேகமாக வீசும் போது ஓதுவதற்கு மற்றுமொரு பிரார்த்தனை3⃣* 🌊


 *«اَللَّهُمَّ! لَاقِحًا، لَا عَقِيْمًا»* 🌧️


💧 *அல்லாஹ்வே! (இக்காற்றை நல்ல மழை பொழிவதற்காக மேகங்களை) சூல் கொள்ளச் செய்யும் காற்றாக (ஆக்கிவிடு), (பறகத் அற்ற, நீரற்ற) மலட்டுக் காற்றாக அல்ல.* 🌧️

____

📋 அல்பானி, வாதிஈ ஆகிய ஹதீஸ் துறை வல்லுனர்கள் இந்த ஹதீஸை ஆதாரபூர்வமானது என்று உறுதி செய்துள்ளார்கள்.

البخاري في الأدب المفرد (٧١٨) عن سلمة بن الأكوع. 

الصحيح المسند (٤٤٧): صحيح. وصحيح الأدب المفرد (٥٥٦).



🌧 *நபி (ﷺ) அவர்கள் மழையை காணும் போது ஓதிய துஆ*


*«اَللَّهُمَّ! صَيِّبًا نَافِعًا»* 


*'அல்லாஹ்வே! (இம்மழையை) பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)'* 


📖ஸஹீஹுல் புகாரி: 1032.



🌦*மழை பொழிந்த பிறகு கூறப்படும் பிரார்த்தனை*🤲🏻

1⃣

*«مُطِرْنَا بِفَضْلِ الله، وَرَحْمَتِهِ»*


*அல்லாஹ்வின் அருட்கொடையாலும் கருணையாலும் எமக்கு மழை பொழிந்தது*


ஸஹீஹுல் புகாரி: 846


2⃣

*«مُطِرْنَا بِرَحْمَةِ الله، وَبِرِزْقِ الله، وَبِفَضْلِ اللَّه»*

*அல்லாஹ்வின் கருணையாலும் அவனது றி(z)ஸ்க்-வாழ்வாதாரத்தாலும் அவனது அருட் கொடையாலும் எமக்கு மழை பொழிந்தது*


ஸஹீஹுல் புகாரி: 4147



⛈ *அதிக மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால் அல்லது ஏற்படும் என்று பயந்தால் ஓத வேண்டிய பிரார்த்தனை* 🤲🏻


*«اَللَّهُمَّ! حَوَالَيْنَا، وَلَا عَلَيْنَا، اَللَّهُمَّ! عَلَى الْآكَامِ، وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ»*


*'அல்லாஹ்வே! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. அல்லாஹ்வே! மலைக்குன்றுகள், உயர் நிலங்கள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)'*


ஸஹீஹுல் புகாரி : 1014.

தொகுப்பு : ஹுஸைன் இப்னு றபீக் (மதனி)

காற்று மற்றும் மழை காலங்களில் ஓதவேண்டிய சந்தர்ப்ப துஆக்கள். காற்று மற்றும் மழை காலங்களில் ஓதவேண்டிய சந்தர்ப்ப துஆக்கள். Reviewed by Madawala News on December 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.