இந்த அரசாங்கம் தேல்வியடைந்து விட்டது என்பதை இந்த அரசாங்கத்தின் பல் வேறு செயற்பாடுகள் மூலமே நிரூபனமாகிவிட்டது



இன்று (01.12.2020) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்

 பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்கடர் அப்புஹாமி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.


ஜனாதிபதியை தலைவராகக் கொண்ட இந்த  அரசாங்கம் தேல்வியடைந்து விட்டது என்பதை இந்த அரசாங்கத்தின் பல் வேறு செயற்பாடுகள் மூலமே நிரூபனமாகிவிட்டது.நேற்று மகர சிறைச்சாலை விவகாரத்தினூடாக பல் வேறு காரணங்களை இந்த அரசு கூற வருகிறது.சிறைச்சாலைக்குள் இருப்பவர்களில் பலர் குற்றவாளிகளாக இருப்பர்,அதே போல் இன்னும் பலர் குற்றவாளிகள் என்று நிரூபனமாகத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இருப்பர்.குற்றமொன்றிற்காக நீதிமன்றத் தீரப்பின் பிரகாரம் குற்றவாளியாக்கப்பட்ட சிறைக் கைதிகளுக்கும்,இன்னும் வழக்கு தொடராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் குற்றவாளி என நிரூபிக்கப்படாத சந்தேகக் கைதிகளுக்கும் ஒரே வித நடைமுறை சிறைச்சாலக்குள் இடம் பெறக் கூடாது.அவர்களும் இந்நாட்டின் ஒரு பகுதியினர்.அவர்கள் ஒரு வரையறைக்குள் இருப்பவர்கள்.விரும்பிய சகலதையும் செய்ய முடியாதவர்கள்.


கொவிட் முதலாம் அலையை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அதற்கு அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம்,என்றாலும் கொவிட் இரண்டாம் அலையை அரசாங்கமே கொண்டு வந்து இன்று இந்த நிலையை அடைந்துள்ளது.இன்று சமூக பரவலாக தொடரந்த வன்னமுள்ளது.சிறைச்சாலைக்குள் இந்தப் பரவல் சென்றமைக்கு அரசாங்கத்தின் பெறுப்பற்ற தனமே காரணமாகும்.இதற்கு அரசாங்கம் தான் பெறுப்பெடுக்க வேண்டும்.சிறச்சாலக்குள் இந்தப் பரவல் அவதானம் இருந்திருந்தால் முறையான திட்டமிடலுடன் அரசாங்கம் கட்டுப்படித்தியிருக்க வேண்டும்.சிறைச்சாலக்குள் பரவலை தடுக்கும் பாதுகாப்பு ஒழுங்குகள் குறித்து கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.இருக்கும் சிறை கூடங்களுக்கு மேலதிகமாக சிறைக்கைதிகளின் தொகை இருப்பதை சிறைச்சாலை நிர்வாகமும் குறிப்பிட்ட அமைச்சரும் ஏலவே அறிந்துருந்தும் எத்தகைய முன் நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்க வில்லை.10 பேர் இருக்க வேண்டிய சிறை கூடங்களில் 20 பேர் வீதம் இருப்பதற்கு ஒப்பானதாகும்.சமூக இடைவெளியை அவர்களால் எவ்வாறு மேற்கொள்ள முடியும்.அவர்களும் மனிதர்கள்.உயிர் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பல நாட்களாக பல் வேறு முயற்சிகளை அவர்கள்

 மேற்கொண்டனர்.சாதாரன சந்தேக நபர்கள், குற்றவாளிகளின் வழக்குத் தீர்ப்புகள் எவ்வாறு அமையும் எனக் கூற முடியாது,பலர் குற்றமற்றவர்களாக வெளி வரலாம் எனவே அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது.உயிர்ப் பாதுகாப்பு முக்கியமான விடயமாகும்.


ரிவேர்ஸ் என்ற போதை மாத்திரை தொடர்பாக பேசப்படுகிறது.அவ்வாறன ஒரு மாத்திரை இருப்பதையும், இலங்கையில் விற்கப்படுகிறது என்பதையும்,அந்த மாத்திரையின் பாவனையின் பின்னர் அதனால் ஏற்படும் உடலியல் அடங்களான சகல மாற்றங்களையும்  எமது நாட்டிலுள்ள அமைச்சர் ஒருவருக்குத் தெரிந்திருக்கிறது.சில அமைச்சர்கள் அதனைப் பவனைப்படுத்தியுள்ளனர் போலும்.இரத்த கசிவு தொடர்பாக கூறுகின்றனர்.இவ்வாறு மானசீக விரோத மாத்திரை இங்கு விற்ப்பனைக்கு அவசியமானதா? எனக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;


இவ்வாறு இந்த மாத்திரை இலங்கைக்கு எவ்வாறு வந்தது?எவ்வாறு கொண்டு வந்தனர்? என்ற கேள்விகள் எழுகின்றன.இன்று சிறைச்சாலை சம்பவத்தை,சர்வதேசத்தில் இலங்கையை அபகீர்த்திற்க்கு உட்படுத்த மேற் கொண்ட செயல் எனக் கூறுகின்றனர்.அவ்வாறு இலங்கையை அபகீர்த்திற்கு உட்படுத்தவுள்ள குழுவினர் யார் எனக் கேட்க விரும்புகிறேன்.அரசாங்கத்தின் தொடர்பிலுள்ள வெளிநாட்டுக் குழுக்களா அ்அல்லது சிறைச்சாலைக்குள் இருக்கும் சிறைக் கைதிகளா யார் இந்தக் குழுக்கள் என்று இதனைக் கூறியவர்களிடம் வினவுகிறேன்.ரிவேர்ஸ் மாத்திரை தொடர்பான தகவல்கள் எங்களுக்குத் தேவை.சமயாவிற்கு இந்த மாத்திரையை வழங்கியது யார்? சமயாவின் தோழர்களுக்கு வழங்கியது யார்.இந்த அமைச்சருக்கு இத்தகைய விடயங்கள் எவ்வாறு தெரிய வந்தது,இவ்வாறு சிறைச்சாலைக்குள் மாத்திரை சென்று இவ்வாறான மறைமுகத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதை அமைச்சர் அறிந்திருந்தது எவ்வாறு இதற்குப் பின்னால் இந்த அமைச்சராவுள்ளார்?இது அரசாங்கத்தின் செயற்பாடா? இதன் பின்னால் உள்ளவர்கள் யார் என்று கேட்கிறோம்.இது தொடர்பாக நாட்டிற்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்துங்கள்.நாட்டு மக்கள் இந்த விடயம் தொடர்பாக அறிய வேண்டும்.இதனை விசாரணைக்குட்படுத்த நீதி அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார்.இந்தக் குழுவின் அறிக்கைக்கு முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள பிரபல அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் ரீவேர்ஸ் மாத்திரை அறிக்கையை முன்வைத்தார் இது தான் திட்டமிடல் செயல் என்று.குழு அறிக்கை தேவைப்படாது.அறிக்கை ஏலவே வெளிவந்து விட்டது. கொவிட் பரவல் இதற்கு காரணம் இல்லை போலும் சிறைச்சாலைக்குள் போதை வஸ்து தொடர்பான விடயம் தானா காரணம் என்று வினவுகிறோம்.இது அரசாங்கத்தின் நகைப்பூட்டும் விடயமாக இருக்கிறது.மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.குழு நியமிப்பதற்கு முன்னரே பிரபல அமைச்சர் மாத்திரியை அறிக்கையை முன்வைத்துள்ளார். இதற்கு முன்னரும் இது பேன்ற ஓர் வெடிச்சம்பவ நிகழ்வு வெளிக்கடை சிறைச்சாலையில் இடம் பெற்றது.சிலர் மரணித்துள்ளனர்.உடனே குறிப்பிட்ட அமைச்சரையும் மாற்றத்திற்குட்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் தேல்வியடைந்து விட்டது என்பதை இந்த அரசாங்கத்தின் பல் வேறு செயற்பாடுகள் மூலமே நிரூபனமாகிவிட்டது இந்த  அரசாங்கம் தேல்வியடைந்து விட்டது என்பதை இந்த அரசாங்கத்தின் பல் வேறு செயற்பாடுகள் மூலமே நிரூபனமாகிவிட்டது Reviewed by Madawala News on December 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.