குறிப்பாக என் சமூகத்திற்காக செய்ய வேண்டிய கடமையை ழுழு மூச்சாக நின்று போராடினோம். கடைசியில் துக்ககரமான செய்தியே கிடைத்தது! - Madawala News Number 1 Tamil website from Srilanka

குறிப்பாக என் சமூகத்திற்காக செய்ய வேண்டிய கடமையை ழுழு மூச்சாக நின்று போராடினோம். கடைசியில் துக்ககரமான செய்தியே கிடைத்தது!கோவிட் 19ஆல் மரணித்த முஸ்லிம் ஐனாஸாக்கைள தகனம்

 செய்வதற்கு எதிராக தான் முன் வந்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து ஆஜரானார். 


கொரோனா தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜஸசாக்களை வழக்கு 30.11.2020 மற்றும் 01.12.2020 தொடர்ச்சியாக விசாரணை முன் எடுக்கப்பட்டு வந்தன. வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து இடம் பெற்றது. இரண்டு நாட்களின்பின் நேற்று  மலை 2.30 மணி அளவில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.என்று ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார் 


வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என்ற நிலையில் ஒரு நீதியரசர் நிலைப்பாடு இருந்த நிலையில் மற்ற இரண்டு நீதியரசர்கள் வழக்கை விசாரிக்க ஏற்காமல் தள்ளுபடி செய்யவேண்டும் என்று நிலையில் இருந்ததால் விசாரணைக்கு எற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டது.

யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெற்றது


இன்ஷா அல்லாஹ் என் சமூகத்தின் உரிமையை வென்று எடுப்பதற்காக பல வழிகளிலும் முன் எடுப்பேன்  ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார். 


அத்துடன் எமது தரப்பு வாதங்களை மிகவும் உருக்கமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்து சமர்ப்பணங்களை செய்திருந்தோம். 


எமக்கு பக்கபலமாக மாற்று மத சட்ட வல்லுனர்களான எம். ஏ. சுமந்திரன், விரான் கொரயா மற்றும் தவராசா போன்ற சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆக்கபூர்வமான வாதங்களை முன்வைத்து, சமர்ப்பணங்களை செய்திருந்தனர். 


அதற்காக அவர்களுக்கு என்னால் முடிந்த பல கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.


குறிப்பாக என் சமூகத்திற்காக செய்ய வேண்டிய கடமையை ழுழு மூச்சாக நின்று போராடினோம்.  கடைசியில் துக்ககரமான செய்தியே கிடைத்தது!


இன்ஷா அல்லாஹ் எம் சமூகத்திற்காக மேலும் மேலும் முயற்சிகளை எடுப்போம்.ஜனாதிபதி சட்டத்தரணி.பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

குறிப்பாக என் சமூகத்திற்காக செய்ய வேண்டிய கடமையை ழுழு மூச்சாக நின்று போராடினோம். கடைசியில் துக்ககரமான செய்தியே கிடைத்தது! குறிப்பாக என் சமூகத்திற்காக செய்ய வேண்டிய கடமையை ழுழு மூச்சாக நின்று போராடினோம்.  கடைசியில் துக்ககரமான செய்தியே கிடைத்தது! Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5