கம்பளை மரியாவத்தை மற்றும் ஜயமலபுர பிரதேச மக்களுக்கு கம்பளை நகர சபை உறுப்பினரின் வேண்டுகோள்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கம்பளை மரியாவத்தை மற்றும் ஜயமலபுர பிரதேச மக்களுக்கு கம்பளை நகர சபை உறுப்பினரின் வேண்டுகோள்..(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை மரியாவத்தை மற்றும் ஜயமலபுர பகுதிகளில் விற்பனை
மேம்படுத்தல் பணியிலீடுபட்ட தொலைதொடர்பு நிறுவனமொன்றின் விற்பனைக்குழு உறுப்பினர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் அவர்களுடன் தொடர்பைப் பேணிய பிரதேசவாசிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக் கொள்ளுமாறு கம்பளை நகர சபை உறுப்பினர் மொஹம்மட் கியாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இக்குழுவினர் மரியாவத்தை, ஜயமலபுர பகுதிகளில் விற்பனை மேம்படுத்தல் பணியிலீடுபட்ட இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.


ஆனால் இனங்காணப்பட்ட பல பகுதிகளில் இருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையானோர் மட்டும் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக் கொண்டனர்.


எனவே, இப்பகுதியில், தற்போது சுகாதாரப் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் பீ.சி.ஆர் பரிசோதனையில் தொடர்பாளர்கள் அனைவரும் அச்சமின்றி இதனை சமூகப்பொறுப்பாகக் கருதி பங்குபற்றிக் கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்பளை மரியாவத்தை மற்றும் ஜயமலபுர பிரதேச மக்களுக்கு கம்பளை நகர சபை உறுப்பினரின் வேண்டுகோள்.. கம்பளை மரியாவத்தை மற்றும்  ஜயமலபுர பிரதேச மக்களுக்கு கம்பளை நகர சபை உறுப்பினரின் வேண்டுகோள்.. Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5