திவுலபிட்டி, மரதகஹமுல பல்பொருள் அங்காடி நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டவுடன் அரிசி விலை குறைந்து, விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

திவுலபிட்டி, மரதகஹமுல பல்பொருள் அங்காடி நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டவுடன் அரிசி விலை குறைந்து, விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படும்.2014 இல் திவுலபிட்டி, மரதகஹமுலவில் தொடங்கப்பட்ட

பல்பொருள் அங்காடி நிலையம் முன்னைய அரசாங்கத்தால் கைவிடப்பட்டதும் என்றும் இது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு அப்பகுதியில் அரிசி ஆலைகள் நிறுவப்பட்டு செயல்படும் போது, நாட்டில் அரிசியின் விலை ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படும் அத்துடன் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் பொருட் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.


"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை அறிக்கையின் படி கிராமிய விவசாயம், வியாபாரம் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களை கிராமியப் பகுதிகளில் உருவாக்கி அந்தப் பிரதேசங்களின் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதே போல பாவனையாளர்களைப் பாதுகாக்கும் செயல் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதோடு அவர்களின் விளைச்சலுக்குத் தகுந்த விலையை நிர்ணயித்து கொள்வனவு செய்து பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மேலும் அமைச்சர் தெரிவித்தார்.

திவுலபிட்டி பிரதேச செயலகத்தின் மரதகஹமுல, வெவேகொடெல்ல பிரதேசத்தின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான நிலத்தில் பாதியிலே நிறுத்தப்பட்டிருந்த பல் பொருள் அங்காடியின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கும் மரதகஹமுல வர்த்தக சங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.


2010.12.02
திவுலபிட்டி, மரதகஹமுல பல்பொருள் அங்காடி நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டவுடன் அரிசி விலை குறைந்து, விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படும். திவுலபிட்டி, மரதகஹமுல பல்பொருள் அங்காடி நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டவுடன் அரிசி விலை குறைந்து, விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படும். Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5