யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு.

 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

யுத்த அனர்த்தங்களினால் மட்டு அம்பாறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 6

மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.


அம்பாறை மாவட்டத்தில்  நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 5 பாடசாலை மாணவர்களுக்கும்  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி பிரதேசத்தில்  மற்றுமொரு மாணவருக்கும் இவ்வாறு  துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று(20) அன்னாமலை 2 இல் அமைந்துள்ள சந்தியடி பிள்ளையார் கோவில் முன்றலில் இடம்பெற்றது.


இந்நிகழ்வானது   சீடாஸ் கனடா அமைப்பின் வேண்டிகோளிற்கிணங்க கல்முனை துளிர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்நதுடன் நிகழ்வில் நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா  பிரதமவிருந்தினராக கலந்து கொண்டதுடன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நா.தர்சினி கல்முனை துளிர் கழக தலைவர் எம்.றோகனகாந்தன் கிராம செவை அதிகாரி கேந்துஜன் சந்தியடி பிள்ளையார் கோவில் தலைவர் மகேஸ்வரன் தயாநிதி    பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கடந்த (22-10-2020)  அன்று கனடா நாட்டில் அமரத்துவமடைந்த அமரர் சிவலிங்கம் தம்பிப்பிள்ளை ஐயாவின் 31 ஆம் நாள் நினைவாக  மேற்குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு. யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு. Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.