முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்துவது எமது கடமை



அலி சப்ரி' என்ற தனி நபருக்கு எதிராக விரல் நீட்டுவதற்கு எம்மில் பெரும்பான்மையான முஸ்லிம்  சகோதரர்களுக்கு உரிமை மற்றும் அதிகாரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட வேண்டும். காரணம் அவர் முஸ்லிம் வாக்குகளினால் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி அல்ல மாறாக 67 இலட்சம் வாக்குகளுக்காக கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஊடாக கட்சியினால் அவரின் சேவை இந்த அரசாங்கத்துக்கு அவசியம் என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றவர் என்பதில் நாம் அனைவரும் உடன்படுவோம் என்று நம்புகிறேன்.

 

அவர் இந்த நிலையை அடைவதற்கு  நாங்கள் என்ன பங்களிப்பை வழங்கினோம்? என்று ஒரு கணம் சிந்திக்க வேண்டும். அவரது சொந்த முயற்சியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடனான நட்பும் தான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருந்தும் எங்கள் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம்கள் சார்பாக அவர் அமைச்சரவையில் உள்ளேயும் வெளியேயும் தனியாக நின்று மிக ஆவேசமாக பெரும்பான்மை சமூகத்தின் கோபத்தையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு போராடுகிறார்.

 

ஆனால் சமூக உணர்வு கொண்ட நாம் குறைந்த பட்சம் அவரின் போராட்டத்தை ஊக்கமளிக்கும் வன்னம் எமது எழுத்துக்களால் அல்லது வார்த்தைகளால் சமூக வலைதளங்களிளாவது ஆதரிக்கும் வண்ணம் எமது செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொண்டு உள்ளோமா? என்று சற்று சிந்தித்து பார்ப்போம். இப்படிப்பட்ட நிலையில் அவர் எமது சமூகத்தின் பெரும்பான்மையானவர்களுக்கு  கடமைப்பட்டவராக நாம் கருதுவது நியாயமற்ற விடயமாகவே நான் கருதுகின்றேன்.

 

எமது அரசியலமைப்பின் ஆபத்தானதாக பெரும்பான்மையான முஸ்லிம் சமூகத்தினால் கருதப்படும் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்த எதிர்க்கட்சி எம்.பி.க்களை எங்கள் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் கடந்த தேர்தலில் ஆதரித்தனர்.  அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு முன்னர் அவர்கள் எங்கள் சமூகத்தின் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட நிலைமையில் இவர்களின் செயல்கள் தவறாக இருந்தாலும் ஓர் அளவுக்கேணும் சமூகம் ஜீரணித்துக் கொள்ள கூடியதாக இருந்திருக்கும்.

 

ஆனால் அவர்களை நம்பி வாக்களித்த அனைத்து மக்களையும் காட்டிக்கொடுப்பதை அவர்கள் ஏன் செய்தார்கள்.  இலங்கை அரசியலை சரியாக புரிந்து கொண்டு அதைப் பற்றிய அறிவைப் பெற்ற ஒருவருக்கு இதற்கான பதிலை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். கௌரவ அலி சப்ரியை கூச்சலிட்டு ராஜினாமா செய்யச் சொன்ன சகோதரர்இ தனக்கு வாக்களித்த சமூகத்துக்கும் அவர்களின் அபிலாசைகளுக்கும் துரோகம் இழைத்த அந்த எம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். அது காலத்துக்குப் பொருத்தமான நியாயமான கோரிக்கையாக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

 

1977 ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. ஜும்மா தொழுகைக்குப் பின்னர் ஏழு முஸ்லிம்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அந்த அரசாங்கத்தின் மிக சக்திவாய்ந்த அமைச்சராகவும் கட்சியின் மூத்த உறுப்பினராக வும் விழங்கிய டாக்டர் பதியுதீன் மஹ்மூத்தை சமூகத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் அணுகி ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர்இ ' நீங்கள் கூறுவது எனக்கு சுலபமான விடயம் ஆனால் அதை நான் செய்தால் அடுத்த கணம் நான் ஒரு சாதாரண குடிமகனாகவே நாட்டு மக்களுக்கு முன்னிலையிலும் மற்றும் இந்த அரசாங்கத்தின் முன்னிலையிலும் கருதப்படுவேன்' என்று அவர் பதில் அளித்தார்.

 

இந்த பதிவின் ஊடாகஇ ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் அரசாங்கத்தில் எமது உரிமைகளுக்காக போராடுவதற்கும் அரசாங்கத்தில் ஆளுமை கொண்ட அதிகாரம் கொண்ட பொறுப்பு வாய்ந்த ஒரு பிரதிநிதித்துவம் இருப்பது அவசியம் இதை உணர்வு ஊட்டிய காலஞ்சென்ற கௌரவ பதியுதீன் மஹ்மூத் அவர்கள் அன்று வெடித்து பிரச்சினையை மிக சிறப்பாக ஒரு வாரத்திற்குள் இராஜதந்திர ரீதியாக சமூகத்துக்கு சார்பாக  கையாண்டு எமது சமூகத்தில் பாராட்டுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதனையும் நான் இங்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

 

எனது சகோதர சகோதரிகளே எங்கள் சமுதாயத்தையும் நாட்டையும் நினைத்துப் பாருங்கள். கௌரவ அலி சப்ரி மாத்திரமே எமக்கு இந்த பலமான ஆட்சியில் எஞ்சியுள்ள ஒரே ஒரு சந்தர்ப்பமாகும்இ ஆதலால் அவரின் கரங்களைப் பலப்படுத்தி வலுப்படுத்தும் ஒரு செயற்பாட்டையே நாம் ஆதரிக்க வேண்டும். நம்முடைய அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும் மறந்துவிட்டுஇ அவருக்கு பலம் தரும் கோபுரமாக இருப்பதோடுஇ இன மதம் மற்றும் சாதி வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் ஒரு சிறந்த இலங்கைக்காக பணியாற்ற அவரை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் முன்வருவோமாக. சர்வவல்லமையுள்ள அல்லாஹ் சுபஹானவுத்த ஆலா அனைத்து விதத்திலும் அவரை பொருந்திக் கொண்டு அருள் பாலிப்பானாக.

 

நன்றி

வசீர் முக்தார்

மக்கள் பிரதிநிதி

யட்டினுவர

கண்டி மாவட்டம்.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்துவது எமது கடமை  முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை  பலப்படுத்துவது எமது கடமை Reviewed by Madawala News on November 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.