காத்தான்குடி சமூகக் குழுமத்தினால் கல்குடா மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

காத்தான்குடி சமூகக் குழுமத்தினால் கல்குடா மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


கடந்த 22 நாட்களுக்கு மேலாக தனிமைப்பட்டுத்தப்பட்ட பகுதியாக 
அறிவிக்கப்பட்டிருந்த கல்குடா பகுதிக்கு தேவையான ஒரு தொகை உலர் உணர்வு பொதிகள் கடந்த (15) திங்கட்கிழமை கல்குடா "அவச நிலை இடர் முகாமைத்துவ குழு"விடம் ஒப்படைக்கப்பட்டது.

"கல்குடா அவசர இடர்முகாமைத்துவ குழு"வின் வேண்டுகோளை ஏற்று காத்தான்குடி சமூகக் குழுமத்தின் 18 சகோதரர்களின் பங்களிப்பில் கிடைக்கப்பெற்ற 105000/= நிதியுதவி மூலம் 1500/= பெறுமதியான 70 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இக்கட்டான பொருளாதர சூழ் நிலைகளிலும் மனமுவந்து இப்பணிக்கு உதவிய சகோதரர்களின் பொருளாதாரத்திலும் தேக ஆரோக்கியத்திலும் வல்ல இறைவன் ரஹ்மத் செய்வானாக..!

جزاك اللهُ خيرًا

- ADMIN
#KKY_COMMUNITY
காத்தான்குடி சமூகக் குழுமத்தினால் கல்குடா மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. காத்தான்குடி சமூகக் குழுமத்தினால் கல்குடா மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5