கொரோனா வைரஸ் முதலில் சமூகத்திற்குள்ளேயே பரவி, பின்னர் சமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைக்குள் பரவியது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனா வைரஸ் முதலில் சமூகத்திற்குள்ளேயே பரவி, பின்னர் சமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைக்குள் பரவியது.

 கொரோனா வைரஸ் சமூகத்தில் காணப்பட்டதாகவும், அது சமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைக்குள்

வந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


சுதேச வைத்திய துறை அமைச்சருடன் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,


கொரோனா வைரஸ் முதலில் சிறைச்சாலைக்குள் பரவவில்லை. முதலில் சமூகத்திற்குள்ளேயே பரவியது.


சமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைக்குள் பரவியது. தினமும் பொலிஸார் ஊடாக கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்.


இவ்வாறு சமூகத்திற்குள் இருந்து வரும் கைதிகள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள்.


எமது அதிகாரிகளும் சமூகத்திற்குள் இருந்தே வருகின்றனர். இந்த நிலைமையில் கொரோனா வைரஸ் எப்படியோ சிறைச்சாலைக்குள் பரவியுள்ளது எனவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் முதலில் சமூகத்திற்குள்ளேயே பரவி, பின்னர் சமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைக்குள் பரவியது. கொரோனா வைரஸ்  முதலில் சமூகத்திற்குள்ளேயே பரவி, பின்னர் சமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைக்குள் பரவியது. Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5