கொரோனாவால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமளிப்பதையே நான் விரும்புகிறேன். - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமளிப்பதையே நான் விரும்புகிறேன்.கொரோன வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழப்பவர்களின்
 உடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதை தான் விரும்புவதாக, காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களுக்கும் இருக்கும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அநுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம் மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதேவேளை நீதியமைச்சர்அலிசப்ரி அரசாங்கத்திடம் இது தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கை குறித்து எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன..


மேலும், கொரோனா வைரஸ் காரணமாக எவராவது இறக்கும் சந்தர்ப்பத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை விடுத்தால், அதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே முடிவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமளிப்பதையே நான் விரும்புகிறேன். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமளிப்பதையே நான் விரும்புகிறேன். Reviewed by Madawala News on November 18, 2020 Rating: 5