வடக்கு மற்றும் கிழக்கில் தாழமுக்கம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

வடக்கு மற்றும் கிழக்கில் தாழமுக்கம்.வங்காள விரிகுடாவின் தென் கிழக்குப் பகுதியில் காணப்பட்ட
 தளம்பல் நிலையானது தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து அடுத்துவரும் 24_48 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழ் அமுக்கமானது எதிர்வரும் 24 ம் திகதியளவில் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையினூடாக மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும்.

இதன் தாக்கத்தின் காரணமாக குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதுடன் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையிலும் காணப்படும். 

வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிராந்தியங்களிலும் அத்துடன் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களிலும் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் மணித்தியாலத்திற்கு 50_60 km இலும் கூடிய வேகத்தில் காற்று வீசும். 

இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடையும் பட்சத்தில் காற்றின் வேகமானது மேலும் அதிகரிக்கலாம். 

எதிர்வரும் 23_25 ம் திகதி வரையான காலப்பகுதியில் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையை அண்மித்த கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2_3 m உயரத்திற்கு மேலெளக்கூடும்.

இக் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 150 mm இலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாடு முழுவதிலும் மணித்தியாலத்திற்கு 40_50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்துவீசக்கூடும். 

ஆனபடியினால் கடல்சார் ஊழியர்களும் மீனவ சமூகத்தினர்களும் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

தேசமானிய 
மொஹமட் சாலிஹீன் 
சிரேஸ்ட வானிலை அதிகாரி. 
வடக்கு மற்றும் கிழக்கில் தாழமுக்கம். வடக்கு மற்றும் கிழக்கில் தாழமுக்கம். Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5