வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் வாக்களிப்பார்கள் .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் வாக்களிப்பார்கள் ..அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிலையில் மக்களின் மனமறிந்து செயற்படுவார்கள் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.


பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை கூறி உள்ளார்.


கடந்த முறை அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வாக்களித்தாக கூறும் விடயம் எவ்வாறாக இருந்த போதிலும் அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிலையில் மக்களின் மனமறிந்து செயற்படுவார்கள்.


அவர்களுக்கு வாக்களித்த எமது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மனம் புண்பட்டுள்ள நிலையில் கொரோனாவினால் மரணிப்பவர்களின்  உடல்கள் எம்மவர்களின் உணவர்கள் பாதிக்கப்படும் நிலையில் பதைக்க பதைக்க எரியூட்டப்படும் நிலையில் இந்த முறையாவது மனச்சாட்சி படி தலைமையோடு நின்று தங்களுடைய மனச்சாட்சியை வெளிப்படுத்துவார்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் மனங்கள் எவ்வளவு புண்பட்டு உள்ளது என்பதை உணர்ந்து வாக்களிப்பார்கள் .. 

வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் வாக்களிப்பார்கள் .. வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்  மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் வாக்களிப்பார்கள் .. Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5