கல்வி அமைச்சினால் வெளியிடும் பாடசாலை அச்சுப் புத்தங்களில் அடிப்படை வாதத்தை போதிக்கும் எந்த விடயங்களும் இல்லை - Madawala News Number 1 Tamil website from Srilanka

கல்வி அமைச்சினால் வெளியிடும் பாடசாலை அச்சுப் புத்தங்களில் அடிப்படை வாதத்தை போதிக்கும் எந்த விடயங்களும் இல்லைஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்

கல்வி அமைச்சினால் வெளியிடும் பாடசாலை அச்சுப் புத்தங்களில் அடிப்படை வாதத்தை போதிக்கும் எந்த விடயங்களும் இல்லை. அத்துடன் கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தாமல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் கண்காணிக்கும் கொள்கையையே அரசாங்கம் கொண்டுள்ளது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று (20) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன, மார்க்க கல்வியை கற்பிக்கும் பாடசாலை புத்தங்களில் அடிப்படைவாதத்தை போதிக்கும் விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கும்போது மெளலவி ஒருவர் தெரிவித்திருந்தார்.


அந்த விடயங்களை இனம் காணப்பட்டுள்ளனவா என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 


அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பொதுவாக கல்வி அமைச்சினால் கண்காணிக்கப்படும். எந்த கல்வி நிறுவனத்தையும் வகைப்படுத்தி அதனை கண்காணிக்கும் கொள்கை அரசுக்கு இல்லை.


மத்ரஸா பாடசாலைகளில் கற்பிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு யாராவது வருவதற்கு அனுமது கேட்டால், அதுதொடர்பில் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் புலனாய்வு பிரிவு இடையில் தொடர்பு இருந்தது. அனுமதி கோருபவர் தொடர்பில் பிரச்சினை இருந்தால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன.


ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இந்த முறைமை செயலிழந்தது. தனிவழி விசா அனுமதி வழங்கியதால், விமான நிலையத்துக்கு வந்து விசா வழங்கி, மத்ரஸா பாடசாலைக்கு கற்பிக்கவேண்டும் என அனுமதிகோரியதுடன் அதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. அவர்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதில்லை. அந்த கொள்கையை நாங்கள் பின்பற்றமாட்டோம்.


ஆனால் அந்த பாடசாலைகளின் பாடநெறிகள், அங்கு கற்பிப்பது தொடர்பில் நாங்கள் கண்காணிப்போம். அந்த பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். என்றாலும் கல்வி அமைச்சினால் வெளியிடும்  அச்சுப் புத்தங்களில் அடிப்படையை போதிக்கும் எந்த விடயங்களும் இல்லை. 


வெளிநாடுகளில் இருந்துவரும் புத்தகங்களில் மற்றும் கற்பித்தல் செயல் முறைகளில் மத அடிப்படை போதனைகள் மேற்கொள்ளப்படுகின்றவா  என்பது தொடர்பில் எமக்குத் தெரியாது.


அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களையும் கண்காணிக்கும் நடவடிக்கையை எமது அமைச்சினால் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

கல்வி அமைச்சினால் வெளியிடும் பாடசாலை அச்சுப் புத்தங்களில் அடிப்படை வாதத்தை போதிக்கும் எந்த விடயங்களும் இல்லை  கல்வி அமைச்சினால் வெளியிடும் பாடசாலை அச்சுப் புத்தங்களில் அடிப்படை வாதத்தை போதிக்கும் எந்த விடயங்களும் இல்லை Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5