ஜனாசா எரிப்புக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மஹஜர்.


ஹஸ்பர் ஏ ஹலீம்_
முஸ்லிம்களின் மரணிக்கும் ஜனாசாக்களை நல்லடக்கம்
 செய்வதற்கு மாறாக கொவிட்19 என்கின்ற போர்வையில் மரணிக்கும் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முன்னனியின் தலைவர் எம்.எம்.முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானையில் (19)இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில் 

வழமைக்கு மாறாக முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்யும் நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டும் இவ்வாறான விடயங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் எரிப்பது மிகவும் மனவேதனை அடைகிறது உலக சுகாதார ஸ்தாபன் கூட இலங்கை நாட்டின் ஜனாதிபதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறது ஜனாசாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதனையும் கண்டு கொள்ளாமல் அரசாங்கம் செயற்படுகிறது சாதகமான முடிவுகள் இது வரைக்கும் கிடைக்கப்பெறவில்லை .

20ம் திருத்த சட்டத்துக்கு ஆறு எம்பிக்கள் முஸ்லிம் சமூகம் சார்பில் ஆதரவாக கையை உயர்த்திய போதும் இவர்கள் இது வரைக்கும் இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்கு வகை சொல்லவில்லை வகைசொல்லியாக வேண்டும். 
முன்னால் அமைச்சர் றிசாதின் கைது தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சியே கடந்த தேர்தல் காலங்களில் அரச நிதியை மோசடியாக பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டதும் ,அண்மைய உயர் நீதிமன்ற தீர்ப்பாக வில்பத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சொந்த நிதியில் மரம் நட்ட வேண்டும் என்பன சொல்லப்பட்டுள்ளது இது போன்றே முன்னால் ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க 60 கோடி ரூபா அரச பணத்தை மோசடி செய்ததாக தெரிவித்து வழக்கு தொடரப்பட்டாலும் அவர்நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டு எந்த குற்றமும் அற்றவர் நிரபராதி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதே காலப்பகுதியில் தான் முன்னால் அமைச்சர் றிசாதும் தேர்தல் காலத்தில் அரச பஸ் வண்டிகளுக்கான போக்குவரத்து செலவாக கொடுக்கப்பட்டது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இது ஒரு தனிப்பட்ட அரசியல் பழிவாங்களே ஆகும்.






ஜனாசா எரிப்புக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மஹஜர். ஜனாசா எரிப்புக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மஹஜர். Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.