இன்று நாட்டில் அரசாங்க சேவைத்துறையில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது.



இன்று (30.11.2020)எதிர் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்
பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள்
சக்தியின் தேசிய அமைப்பாளர்,பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

இன்று மாலை 06.00 மணியளவில் ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது நிறைவேற்று சபை கட்சித் தலைமையகத்தில் கூடவுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால செயற்பாடுகள், 2021 ஆம் ஆண்டுக்கான பல் வேறு திட்டங்கள் இதில் ஆராயப்படவுள்ளன.அதில் பிரதானமானது,


01.)சகல தேர்தல் தொகுதிகளுக்குமான ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களை நியமிப்பது.

02).கட்சியின் அடிமட்ட ஒருங்கிணைப்பை பலமாக ஸ்தாபிப்பதாகும்.

03).கட்சியுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்கள்,ஏனைய ஒன்றினைந்த தொழிற் சங்கங்கள்,இளைஞர் மற்றும் மகளிர் விவகாரப் பகுதிகள் அடங்களான ஏனைய பிரிவுகளை ஸ்தாபித்தல்.

என்பனவற்றை ஸ்தாபிப்பதற்கான அனுமதியை இன்றைய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

அதே போல் 2021 ஆம் ஆண்டில் கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளையும் நாடு தளுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கான அனுமதியை இன்றைய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பெற்று கட்சியின் 2021 ஆம் ஆண்டிற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்தி முன்னேடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.நாங்கள் கடந்த மாதங்களில் நடைமுறைப்படுத்திய ‘தினமு’வேலைத்திட்டத்தை கொரோனா நிலைமைகள் சீராகியதும் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.


நாட்டின் சம கால விடயங்கள் குறித்து பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

01.இன்று நாட்டில் அரசாங்க சேவைத்துறையில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது.
19ஆவது திருத்தத்தை நீக்கியதும் இந்த நிலைமை ஏற்ப்பட்டுள்ளது.அரசாங்க சேவைத்துறையில் அரசியல்மயமாக்கல் மிக வேகமாக இடம் பெற்று வருகிறது.19 ஆவது திருத்தத்தை நீக்கியதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் தலைவர்களும்,ஏனையவர்களும் நடந்து கொண்ட விதங்களைப் பார்க்கின்ற போது புலப்படுகிறது.

கடந்த அன்மைய நாட்களில் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்ப்படுத்திய அச்சுறுத்தல்களை நாங்கள் எல்லோரும் ஊடகங்களில் கண்டோம்.

இது மாத்திரமல்ல லக்கல பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் நிகழ்வொன்றில் ஜனாதிபதி அவர்கள் கூறினார்;நான் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒரு சட்டமாக கருத வேண்டும் என்று,அவ்வாறானல் நாட்டிற்கு அரசியல் யாப்பு ஒன்று தேவையில்லை.சுற்று நிரூபனங்கள் தேவையில்லை.ஜனாதிபதியின் வாயினால் தெரிவிக்கப்படும் வசனங்கள் சட்டமாக்கப்படுவது என்றால் என்ன கூறுகிரீர்கள் என்று எங்களுக்கு வினவத்தோன்றுகிறது.

இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அரச சேவையை இழிவு படைத்தப்பட்டதை வரலாற்றில் காண்கிறோம்.ஷிரானி பண்டாரநாயக்கவை நீதிபதிப் பதவியில் இருந்து நீக்கியமையும் நீக்குவதற்காக கையான்ட வழிமுறையும் இதில்
பிரதானமானது.


சாதாரண சூழல் ஒன்றில் இடம்பெற்றிருக்கக் கூடாத விடயமொன்று.அதற்கு முன்னர் களனிப் பிரதேசத்தில் அரச அதிகாரியொருவரை மரத்தில் கட்டி வைத்தனர்.

இவ்வாறன ஒரு நிலைமையை மீண்டும் ஏற்ப்படுத்துவதற்காகவா முனைகிறீர்கள் என்று வினவுகிறோம்.

இதன் மூலம் அரச துறையை இவ்வாறு இழிவுபடுத்துவதன் மூலம் அரச சேவைக்குள் பாரிய பிளவுகளை ஏற்படுத்தி மக்களை அதிலிருந்து தூரமாக்கவே முயற்ச்சிக்கின்றனர்.


ஜனாதிபதியின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் அரச துறையைப் பாதுகாப்பதாகவும், சக்திப்படுத்துவதாகவும் தெரிவித்த வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என வினவுகிறோம்.அரச துறை இன்று மிக வேகமாக அரசியல்மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்குறது.


அரச ஊழியர்களின் பல்வேறு வரப்பிரசாதங்களை நீக்கியிருக்கின்றனர்.2020 1/1,ஆம் ஆண்டிலிருந்து ஓய்வூதியக்காரர்களுக்கு சேர்க்கவிருந்த கொடுப்பணவுத்தொகையை மறக்கடித்து கிடப்பில் போட்டுள்ளனர்.

2020 1/1 இலிருந்து நடைமுறைக்கு வரவிருந்த அரச ஊழியர்களின் இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பை நீக்கியுள்ளனர்.


அரச ஊழியர்களுக்கு அதிக வரப்பிரசாதங்களை வழங்கியது கடந்த அரசாங்கம் தான்.அரச ஊழுயர்களை பழிவாங்கும் படலம் அதிகரித்த வன்னமுள்ளது.பொது மக்களுக்கு பயனளிக்கும் நல்ல குறிக்கோலுடன் 1990 சுவசெரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது கடந்த அரசாங்கமாகும்.

1600 ஊழியர்கள் இதற்காக உள்ளனர்.கிட்ட தட்ட 290 அம்பியுலஸ் வண்டிகள் காணப்படுகின்றன.இதன் பயன்பாட்டை கொவிட் நிலைமைகளின் போது நன்றாக உணர்ந்திருந்தோம்.


இக்கால கட்டத்தில் பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் மக்களுக்காக அர்ப்பனத்துடன் சேவையாற்றிய ஊழியர்கள் இருக்கின்றனர்.


இதனை ஆரம்பித்த நாட்களில் விமல் வீரவங்ச போன்றவர்கள் இதன் மூலம் இந்தியாவின் ரோ புலனாய்வு அதிகாரிகள் இங்கு வருவதாகவும் இதன் சாரதிகள் இந்தியப் பிரஜைகள்,இது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் கூறினார்.


கடந்த நான்கு வருடங்களாக இந்நாட்டு மக்களுக்கு பாரிய நலனைப் பெறறுக் கொடுத்த திட்டமாக இது அமைந்து காணப்படுகிறது.


இவ்வாறு நான்கு வருடங்கள் இயங்கிய இத்திட்டத்தில் அவர்கள் எதிர் நோக்கும் தொழிர் சார் பிரச்சிணைகளை அடையாளப்படுத்தி குறைபாடுகளை வெளிப்படையான ஊடகவியலாளர் மாநாடு நடத்தி காரணங்களை முன்வைத்தார்கள் என்று இன்று அவர்களை வேலையை விட்டும் நீக்கியுள்ளனர்.
இது மிகவும் பக்கசார்பானது.


இதை முன்கொண்டு செல்வது அரசாங்கத்தின் கடைமைகளில் ஒன்று.

அவர்கள் தெரிவித்த விடயங்கள் பொதுவானவை;

01.அம்பியுலன்ஸ் வண்டியிலுள்ள குறைபாடுகள்.

2.கொவிட் நிலைமையில் அவர்களுக்கான பாதுகாப்பு ஆங்கிகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் மற்றும் தமக்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் வினவியது.

3.அவர்களின் ETF மற்றும் EPF நிதிகளை முறையாக வேறாக்கி குறித்த நிதியங்களில் வைப்பிலிடக் கோரியமை.
இவைகளைத்தான் அவர்கள் வினவினார்கள்.

இதை வினவியதற்காக இன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இதை முற்றாக இல்லாமலாக்கும் செயற்பாட்டிற்காகவா கொண்டு செல்கிறீர்கள் என்று வினவுகிறோம்.

இது இழிவான செயல்.சுகாதர அமைச்சர் அவசரமாக இதில் தலையிட வேண்டும்.அவர்களின் கோரிக்கைகளைக்கு தீர்வு பெற றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.
இன்று நாட்டில் அரசாங்க சேவைத்துறையில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இன்று நாட்டில் அரசாங்க சேவைத்துறையில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. Reviewed by Madawala News on November 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.