டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டார்..



நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.


கட்சி யாப்பின் பிரகாரம் அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

20 ஆம் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க கட்சி ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக டயனா கமகே நடந்து கொண்டமையினாலேயே அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது


கட்சியின் நற்பெயர் ,ஒழுக்கம் மற்றும் மேன்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


கட்சியின் தலைவர் என்ற வகையில் தமக்கு கிடைத்துள்ள அதிகாரத்திற்கு இணங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


இதேவேளை ஆளுங்கட்சியின் கோரிக்கைக்கு அமைய டயானா கமகே மற்றும் அரவிந்த குமார் ஆகியோருக்கு ஆளுந்தரப்பில் ஆசனங்களை ஒதுக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டார்.. டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டார்.. Reviewed by Madawala News on November 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.