மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளின் பரிதாப நிலை.



ஆடுகள் கூட்டமொன்றிற்கு நல்ல மேய்ப்பர்கள் கிடைக்கவில்லையாயின்
அல்லது மேய்ப்பர்கள் தங்களது பிரதான கடமையை மறந்து சிற்றின்பங்களில் மூழ்கிக் கிடப்பார்களாயின் அந்த ஆடுகளின் விதி மிகப் பரிதாபத்திற்குரியதாகிவிடும்.


ஆடுகள் தமது இலக்குகளுக்கான பாதையில் செல்லாமல் கால்போன போக்கில் பயணிக்கும், அப்போது எங்கிருந்தோ வந்து கம்பு எடுக்கின்ற எல்லோரும் அதனை மேய்க்கத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் அப்பாவி ஆடுகளை ஓநாய்களின் கூடாரங்களை நோக்கியும் அழைத்துச் செல்வார்கள்.


அல்லது ஏதாவது கைமாறு பெற்றுக் கொண்டு ஆடுகளை அறுத்துச் சாப்பிடக் கொடுத்து விடுவார்கள்.


இலங்கை முஸ்லிம் சமூகமும் மேய்ப்பர்கள் இல்லாத ஆட்டுக் கூட்டம் போலவே ஆகியிருக்கின்றது.


சரியான, செயல்வீரமுள்ள அரசியல் தலைமைத்துவங்களும், சமய மற்றும் கருத்தியல் ரீதியான வழிகாட்டுதல்களும் கிடைக்காமல் போயிருக்கின்ற காரணத்தால், இன்று முஸ்லிம் சமூகத்தை யார் யாரோ எல்லாம் தாம் விரும்பிய வழியில் வழிநடாத்த முனைகின்றனர்.


அவ்வாறான ஒரு கட்டமைப்பும் கட்டுக்கோப்பும் உருவாக்கப்படாத காரணத்தால் எடுப்பார் கைப்பிள்ளைச் சமூகமாக முஸ்லிம்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.
இதனால், முஸ்லிம் சமூகம் கடந்த 3 தசாப்தங்களில் நிறைய அரசியல்;, மத, அடிப்படை உரிமைகளை இழந்திருப்பதுடன், முஸ்லிம்களின் ஒரு பிரதான பிரச்சினைக்கு கூட முறையான தீர்வு காணப்படவில்லை. அபிலாஷைகளும் குறைந்தபட்ச வேண்டுதல்களும் கண்டுகொள்ளப்படவில்லை.


பிச்iசைப் பாத்திரங்களில் விழுகி;ன்றவற்றை வைத்து ஆறுதல் கொள்ள வேண்டிய நிலையே இன்னும் இருக்கின்றது.
எரியும் விவகாரம்

ஒரு தனித்துவமான இனக் குழுமம் என்ற அடிப்படையில் தூரநோக்காகச் சிந்தித்து திட்டமிட்ட அடிப்படையிலும் ஒரு கட்டமைப்பாகவும் செயற்படாத காரணத்தால் முஸ்லிம் சமூகம் இழந்தவற்றின் பட்டியலில் கடைசி விவகாரமே, கொரோனா தொற்றினால் இறக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கின்ற பிரச்சினையாகும். எனவே, இந்நிலைமையை மாற்றியமைக்காத வரையில், இவ்வாறான இழப்புக்கள் தொடர்கதையாகவே இருக்குமெனலாம்.



எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நாட்டில் பெரும்பான்மைச் சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டும் என்பது நடைமுறை யதார்த்தமாகும்.


இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை மறுதலித்து, இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவுக்கமைவாக கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்;லிம்களின் உடல்களும் எரிக்கப்பட்டு வருகின்றன.
கொவிட்-19 வைரஸ் பரவல் பற்றி ஏற்பட்டுள்ள அச்சம், நிலத்தடியில் வைரஸ் பரவுவதற்கான அபாயநேர்வுச் சாத்தியம் பற்றிய முன்கணிப்புகள்;, தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுவதை தடுத்தல்
தவிர்க்க வேண்டிய தேவைப்பாடு ஆகியவற்றை சாதமாகப் பயன்படுத்தி, மேற்படி தீர்மானத்தை அரசாங்கம் நியாயப்படு;த்தியது. இது அரசியல் தீர்மானமில்லை என்று; சொல்லப்பட்டாலும் அதில் அரசியல் இழையோடியிருந்ததை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல.



இவ்வாறான பின்னணியில், முஸ்லிம் சமூகத்தின் வேண்டுதலை அரசாங்கம் மீளப் பரிசீலனைக்கு எடுத்திருக்கின்றது.



அமைச்சரவையில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.


அதற்காக குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால், வர்;த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்ட விடயத்தை ஒரு வாய்மூல அறிக்கையின் ஊடாக மீளப் பெற முடியாது. அதற்கு சில நடைமுறைகள் உள்ளன.
சடலங்களை எரிக்கும் தீர்மானத்திற்கு அடிப்படைக் காரணம் சுகாதார நிபுணர்களின் அறிக்கை என்று அரசாங்கம் முன்னர் சொல்லிவி;ட்டதால்,


இப்போது ஜனாஸாக்களை அடக்கலாம் என்ற அறிவித்தலை அரசியல் தீர்மானமாக வெளியிட முடியாது. அப்படிச் செய்தால் அதனை சிங்கள கடும்போக்காளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.


எனவே எவ்வகையிலேனும் சிங்கள மக்களை திருப்திப்படுத்தக் கூடிய அறிக்கையை நிபுணர் குழு தருமாக இருந்தால் மட்டுமே அரசாங்கம் முஸ்லிம்களை கோரிக்கையை நிறைவேற்றும்.
இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல், ‘ஜனாஸா அடக்குவதற்கு அனுமதி கிடைத்துவிட்டது’ என்ற பாங்கில் சமூக வலைத்தளங்களில் இடப்பட்ட பதிவுகள், சிங்கள மக்களால் வேறு கண்ணோட்டத்தில் நோக்கப்படுகின்ற பெயர் குறிப்பிடத்தக்க முஸ்லிம் அமைப்பு இவ்விடயத்தில் செயற்பட்ட விதம், வாய்க்கு அவல் கிடைக்கும் வரை காத்திருந்த ஞானசாரர் போன்ற பேர்வழிகளின் செயற்பாடுகள் ஆகியவற்றினால், வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாளி உடைந்து விடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.


இந்த நிலைமையைத்தான், சரியான மேய்ப்பர்கள் இல்லை என்று; இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.  


முஸ்லிம்களின் உரிமைகளை எவ்வாறு பெறுவது, அதற்காக யார் பேசுவது, யார் அமைதியாக இருப்பது, அதற்காக என்ன ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்பதற்கான சரியான திட்டங்கள் இல்லாமையால், முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் கம்பெடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக் காரர்கள் ஆக முனைகின்றனர்.


அரசியல் இயலாமை


உலகில் 180 மேற்பட்ட நாடுகளில் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்ற நிலையில் இலங்கையில் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை அரசாங்கம் செய்த பெரும் அநியாயமாகும். 

எனவே இதனை ஆரம்பத்திலேயே கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அது சாத்தியப்படவில்லை.

 
பொதுஜனப் பெரமுணவுக்காக முஸ்லிம்கள் மத்தியில் பிரசாரம் செய்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, அமைச்சர் அலிசப்ரி உள்ளடங்கலாக அனைத்து ஆளுந்தரப்பு முஸ்லிம் எம்.பி;.களாலும் அது முடியவில்லை. றவூப் ஹக்கீம், றிசாட் போன்றோராலும் இயலவில்லை. 



இப்போது கொரோனாவினால் கணிசமாக முஸ்லிம்கள் மரணி;த்து வருகின்ற நிலையில், மீண்டும் நீதி அமைச்சரும் வேறு ஓரிரு முஸ்லிம் எம்.பி.;க்களும் முயற்சிகளை எடுத்துள்ளனர். 


இதனையடுத்து, நல்ல செய்தி கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட சூழலில், பக்குவமற்ற செயற்பாடுகளால் இனவாத சக்திகள் விழித்துக் கொண்டுள்ளன. 


சிங்கள மக்களை நம்பி ஆட்சி நடாத்தும் பொதுஜனப் பெரமுண அரசாங்கமானது இவ்வாறான நிலைமை ஏற்படுவதை விரும்பாது. எனவேதான் அமைச்சரவையில் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்ற பாங்கிலான அறிக்கைகள் வெளியிப்பட்டு; வருவதை காண முடிகின்றது. இப்படித்தான் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையும் கைகூடாமல் போனது என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.
இந்த உரிமையை மறுப்பது பன்மைத்துவத்தை மறுதலிக்கும் செயற்பாடாகும்;. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் செய்வதெல்லாம் சரி என்று சொல்லிக் கொண்டு வாழாவிருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், அனைத்து விவகாரங்களிலும் எல்லோரும் விடயத்தைக் கையில் எடுக்காமலும் புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டியிருக்கின்றது. 



ஏனெனில், முஸ்லிம் சமூகத்தில் அரசியல் மற்றும் சமய ரீதியாக எல்லா மக்களும் கட்டுப்படுகின்ற ஒரு கட்டமைப்பும், உரிமையை வென்றெடுப்பதற்கு காத்திரமான திட்டங்களும் கைவசம் இல்லை. இவ்வாறான கைங்கரியங்களை பெருந்தேசியம் திட்டமிட்டும் செய்யலாம் என்றாலும், அதனை முறியடிப்பதற்கான கூட்டுத் திட்டம் முஸ்லிம் சமூகத்திடம் இல்லாததால் கடந்த காலங்களில் இதுபோன்ற இழப்புக்களை முஸ்லிம்கள் சந்திக்க நேரிட்டது.  


சரியான தலைமைத்தும்
முதலில் அரசியல், சமூக, சமய தலைமைத்துவங்கள் சரியானவையாக, செயற்றிறனும், சமூக சிந்தனையும் கொண்டவையாக இருக்க வேண்டும். 


அவ்வாறனவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அந்தத் தலைமைத்துவம் சரியானதாக இருக்கும் பட்சத்தில் அதற்குப்பின்னால் ஒரு சமூகமாக அணிதிரள வேண்டும். புத்திஜீவிகள், படித்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் தொடக்கம் சாதாரண விவசாயி வரை எல்லோரும் பங்களிப்பு வழங்குவதுடன், கூட்டுக் கலந்துரையாடலின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அவை தூரநோக்குள்ள திட்டங்களாக வகுக்கப்பட வேண்டும். 



ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு நானும் நீங்களும் சாட்சிகள்! தேசிய ரீதியாக சிந்தித்து செயற்படும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இல்லை. ஒற்றுமையைப் போதிக்கும் மார்க்கத்தை பின்பற்றும் கூட்டத்திடையே ஏகப்பட்ட சமய இயக்கப் பிளவுகளும் கட்டுக் கோப்பு இல்லாத தன்மையும் பெரும் சாபமாக மாறியிருக்கின்றன. 



தமிழர் முன்மாதிரி
இலங்கையில் ஏனைய சமூகங்களில் சில முன்மாதிரிகளை காணலாம். குறிப்பாக, தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையில் என்னதபான் பிணக்குகள் இருந்தாலும் சமூகம் என்ற புள்ளியில் இரா.சம்பந்தனும், சி.வி. விக்னேஸ்வரனும், டக்ளஸ் தேவானந்தாவும், மனோ கணேசனும் சந்திப்பார்கள். 
சம்பந்தன் போன்ற தமிழ்த் தலைவர் ஒருவர் ஒரு அறிவிப்பைச் செய்தால் கணிசமான தமிழர்கள் அதற்கு செவிசாய்க்கும் நிலையே இன்னுமிருக்கின்றது. சிங்கள அரசியலிலும் மக்கள் ஆணையைப் பெற்ற ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் கட்டுப்படுவதைக் காணலாம். 



துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம் முஸ்லிம் சமூகத்;திற்குள் இந்த நிலைமை கிடையாது. இலங்கையில் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் தளபதிகள் என ஏகப்பட்டோர் இருக்கின்ற போதிலும், பொதுவாக 60 சதவீதத்திற்கும் அதிகமான இலங்கை முஸ்லிம்களால் நம்பிக்கையான தலைவர் என ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவர் யாருமில்லை. என்பதை சொல்லியாக வேண்டும். 



றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், அதாவுல்லா உள்ளடங்கலாக கட்சித் தலைவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் தேசிய தலைவர்கள் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகின்றனர். 
ஆனால், அவர்கள் உண்மையில் தங்களது கட்சிகளின், கட்சிசார் ஆதரவாளர்களின் தலைவர்களாக இருக்கின்றார்களே தவிர முஸ்லிம் சமூகத்தின் தேசிய தலைவர்களாக தம்மை வளர்த்துக் கொள்ளவில்லை. 


தலைமைத்துவ வெற்றிடம்
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமான அறிவு பல முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கிடையாது. வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் காணி;ப் பிரச்சினை உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகள் பற்றிய தரவுகள் எத்தனை அரசியல்வாதிகள் கைவசம் வைத்திருக்கின்றனர்? 


வடக்கு, கிழக்கை இணைத்தோ இணைக்காமலோ இனப் பிரச்சினை தீர்வுத் திட்டமெதுவும் முன்வைக்;கப்பட்டால் அதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு எதுவாக இருக்க வேண்டும் என்ற பொது யோசனை ஆவணங்களை எத்தனை தலைவர்கள் தயார்படுத்தியிருக்கின்றனர். 

வெளிநாடுகளுடனான இலங்கை முஸ்லிம்களின் உறவு எங்ஙனம் உள்ளது? நமது பிரச்சினை எந்தளவுக்கு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது? என்ற கேள்விகளுக்கு விடை மக்கள் அறியாததல்ல. 


இவ்வாறு முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தி, எல்லா அரசியல்வாதிகளும் ஓரளவுக்கேனும் ஒன்றிணைந்து அப்பிரச்சினைகளை அணுகியிருந்தால், அவ்வாறான உரிமைகள், அபிலாஷைகளில் சிலவற்றையேனும் முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருந்தால், அவர்களை இலங்கை முஸ்லிம் சமூகம் தலைமைத்துவ சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்கும். ஆனால், அவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நீண்டகால திட்டமிடங்களும் திட்ட வரைபுகளும் இன்றி சிறுபிள்ளைத்தனமான அரசியலைச் செய்தமையாலேயே அவர்களை அங்கீகரிக்காத நிலை காணப்படுகின்றது.  


இது விடயத்தில், முஸ்லிம் சிவில் சமூகத்திலும் தவறுகள் உள்ளன. அதாவது, தமக்கு இவர்தான் பொருத்தம் எனக் கூறி ஒரு பொருத்தமற்ற அரசியல்வாதியை தெரிவு செய்துவிட்டு, பிறகு அவரை தமது பிரதிநிதியாக, அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளாமல் செயற்படுகின்றமை ஆகும். அத்துடன், தமது சொந்த அரசியல் விருப்பு வெறுப்பு என்ற கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ஆட்சியாளர்களை விமர்சிக்கின்ற அல்லது கண்மூடித்தனமாக ஆதரிக்கின்ற போக்கும், எந்த முஸ்லிம் தலைவர்களுக்கும் கட்டுப்படாத எகத்தாள போக்கும் மிக மோசமானதாகும். 


கிறிஸ்தவர் கட்டுக்கோப்பு
இதேவேளை சமய விடயத்தை நோக்கினால், பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஒரு அறிவிப்பை விடுத்தால் இந்த நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களும் அதன்படி செயற்படுவார்கள். அவரிடம் கேள்வி கேட்பதோ விமர்சிப்பதோ இல்லை. ரோமன் கத்தோலிக்கர்கள், ரோமன் கத்தோலிக்கர் அல்லாதோர் என்ற வேறுபாடுகளைக் கடந்து அவர்கள் மத தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவார்கள். 


ஆனால், முஸ்லிம் சமூகத்தில் இந்த நிலை இப்போது மாறிவருகின்றது. ஜம்இய்யதுல் உலமா சபையின் செயற்பாடுகளின் காத்திரமானதன்மை பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு தேசிய ரீதியான அமைப்பு என்ற அடிப்படையி;ல் கணிசமான முஸ்லிம்கள் கட்டுப்பட்டாலும் சிலர் விமர்சிக்கத் தொடங்குகின்றனர். தப்லீக் ஜமாஅத், தௌஹீக் என்ற பல மார்க்க கொள்கைகளில் நின்று கொண்டு விவாதித்து அசிங்கப்பட்டுக் கொள்வதைக் காண முடிகின்றது. 


இவ்வாறான சந்தர்ப்பத்தில், உரிமைக்காக குரல் கொடுத்தல் என்ற பெயரில் ஒரிரு முஸ்லிம் சமய அமைப்புக்கள் பின்விளைவுகள் பற்றிச் சிந்திக்காமல் சில நடவடிக்கைகளை எடுத்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன. பிறகு, முஸ்லிம்களின் பிரச்சினைகளை சிங்கள கடும்போக்காளர்கள் அடிப்படைவாதிகளின் பிரச்சினை என அடையாளப்படுத்த தொடங்குகின்றனர். 


இதன் காரணமாகவே, இனவாதிகளுக்கும் இவ்வாறான அமைப்புக்களுக்கும் இடையில் திரைமறைவு தொடர்புகள் உள்ளதா என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன. 


முகநூல் மேதாவிகள்
இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். அதாவது. குறிப்பாக தமிழ் சமூகத்தில் ஒரு பிரச்சினை பற்றிய விடயஅறிவு இல்லாதவர்கள் அதுபற்றிப் பேசுவது கிடையாது. அரசியல் தெரியாத பாடசாலை மாணவன் அரசியல் பற்றி அறிவுரை கூறுவதில்லை. பொதுவாக ஆய்ந்தறியாமலும் விளைவுகள் பற்றிச் சிந்திக்காமலும் ஒரு முகநூல் பதிவு கூட இடப்படுவது இல்லை. அவரவருக்கான பணியை அவரவர் பார்க்கின்றனர் எனலாம். 


ஆனால், முஸ்லிம் சமூகத்தில் எல்லோரும் அரசியல் வித்தகர்கள் போலவே செயற்படுகின்றார்கள். இதனை சமூக வலைத்தளங்களில் வெகுவாகக் காண முடிகின்றது. ஒரு விவகாரம் பற்றிய அறிவோ, வரலாற்றுப் பி;;ன்னணியோ தெரியாதவர்கள், ஒரு செய்தியின் மூலம் மற்றும் அதன் உண்மைத்தன்மை பற்றி அறியாதவர்கள் என எல்லா ரகமான இளைஞர்களும் இன்று அவ் விடயத்தை பற்றி அதிமேதாவித்தனமாக கருத்துச் சொல்ல முற்படுகி;ன்றனர். தம்மை பெரும் அறிவாளிகள் என நினைத்துக் கொண்டு பொழுதுபோக்காக அவர்கள்; இடும் பதிவுகள் பெரும்பாலும் வேண்டாத விளைவுகளுக்கே இட்டுச் செல்கின்றன. 


இவ்வாறு, முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு விடயப் பரப்பிலும் கட்டுக்கோப்பின்மையும், திட்டமிடப்படாத அணுகுமுறையும் கையாளப்படுகின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நாம் மேலே குறிப்பிட்டதுதான். யார் யார் இந்த சமூகத்தை அரசியல், சமய, சமூக, கருத்தியல் ரீதியாக வழிநடாத்த வேண்டுமோ, அவர்கள் தலைமைதாங்கி அப்பணியைச் சரிவரச் செய்யாமையால் அல்லது அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாமையால் இந்த எதிர்விளைவுகளை சந்திக்க நேரிட்டுள்ளது. 


இதன் காரணமாகவே முஸ்லிம் சமூகம் மேய்ப்பர்களை தொலைத்த ஆடுகள் போல தறிகெட்டு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பொறுப்புவாய்ந்த அரசியல், சமய, சமூக தலைமைத்துவங்கள் தமது கடமையை தவறவிட்டதாலேயே ‘தடியெடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரர்கள்’ ஆகிக் கொண்டிருக்கின்றனர். ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ சமூகம் ஆக்கப்பட்டிருக்கின்றது. இதைத்தான் இன்று விதி என்கி;ன்றோம். 


எனவே, முஸ்லிம்கள் ஒரு சமூகமாக சிந்தித்து, இந்நிலைமையை சீர்செய்து கொள்ள முன்வரவில்லையாயின், எதிர்காலத்தில் ஜனாஸா எரிப்பை விட இன்னும் பாரதூரமான இழப்புக்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். 


- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 15.11.2020)

மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளின் பரிதாப நிலை. மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளின் பரிதாப நிலை. Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.