எதிர்காலத்தில் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதே தனது இலட்சியம் : அம்மார் ஸய்ன்



ஹஸ்பர் ஏ ஹலீம்_
வெளியான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றின்படி
கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த மொஹமட் நசீர் அம்மார் ஸய்ன் எனும் மாணவன் 190 புள்ளிகளை பெற்று கிண்ணியா வலயத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.


எதிர் காலத்தில் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதே தனது இலட்சியமாகும். எனது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவும் 190 புள்ளிகளைப் பெற பிரதான காரணமாகவும் இருந்த பாடசாலை ஆசிரியரான சீ.எம்.எம்.சமீர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு பாடசாலையின் அதிபர் பி.அப்துல் றவூப் மற்றும் சக ஆசிரியர்கள் உட்பட தாய் தந்தை அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என மாணவன் அம்மார் செயின் தெரிவித்தார்.


இவர் வைத்தியர் மொஹமட் நசீர் என்பவரின் கனிஷ்ட புதல்வரும் ஆவார்.




எதிர்காலத்தில் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதே தனது இலட்சியம் : அம்மார் ஸய்ன் எதிர்காலத்தில் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதே தனது இலட்சியம் : அம்மார் ஸய்ன் Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.