அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை.



போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பகுதிகள்
 திறக்கப்பட்ட காரணத்தினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.


இதனூடாக குறித்த பகுதிகளில் மீண்டும் அவதானமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


விஷேடமாக கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட துறைமுகத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்தும் கட்டுப்பாடின்றி தொற்றாளர்கள் பரவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா அவதானம் அதிகமுள்ள இடங்களிலிருந்து குறித்த நிறுவனங்களுக்கு பணியாளர்கள் வந்து செல்வதாகவும் குறிப்பாக கொழும்பு மாநகர சபைக்குடபட்ட துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் கட்டுபாடின்றி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனவே திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா தொடர்பில் தீவிர அவதானம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை. அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை. Reviewed by Madawala News on November 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.