57 - 4386 இலக்க வேனை நாட்டில் எங்கு கண்டாலும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

57 - 4386 இலக்க வேனை நாட்டில் எங்கு கண்டாலும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.-அன்சார் எம். ஷியாம்
ஏறாவூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவரது டொல்பின் வேனை,
கிழக்குமாகாண விவசாய அமைச்சின், உற்பத்தி திறன் திணைக்களத்திற்கு மாதாந்த வாடகைக்கு தருமாறு, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்,
மிகவும் இலாவகமாக பேசி, திருகோணமலை, மாகாணசபை வளாகத்துக்கே வரும்படி கூறி,
வேனின் ஆவணங்களை திணைக்களத்துக்கு முன்பாகவே வைத்து வாங்கிக் கொண்டு உள்ளே செல்வது போல் நடித்து,
பின்னர் குறித்த வேனை திணைக்களத்திள்கு பாரப்படுத்த, அனைத்து வேலையையும் முடித்துவிட்டேன்.இனி மாதாமாதம் குறித்த வேன் உரிமையாளரின் வங்கிக் கணக்கிலக்கத்திற்கு திணைக்களத்தினால் பணம் வரும் என்று கூறி,
வேனை எடுத்து விட்டு, கார் ஒன்றை ஹயர் பண்ணித் தருகிறேன், அதில் வீடு செல்லுங்கள் என்றதும், அவ்வாறே வேனை ஒப்படைத்துவிட்டு வீடு வந்துள்ளனர்.

மாதம் ஒன்றாகியதால், குறித்த நபரோடு தொடர்பை ஏற்படுத்தியபோது தொலைபேசி வேலை செய்யாத காரணத்தால் , கவலையடைந்த இவர்கள், குறித்த நபர் பற்றிய விசாரணையில் ஈடுபட்ட போதுதான்,

குறித்த நபர் ஏமாற்றுப் பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.

இதனை கூடுதலாக பகிர்ந்து, வேன் எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய உதவுமாறு குறித்த வேனோடு சம்பந்தப் பட்டவர்கள் தெரிவித்தார்கள்.

தொடர்புகளுக்கு :
 0777401458 
 753803369  

#ஏறாவூர் #நஸீர்

(குறிப்பு : குறித்த வேன் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.)
57 - 4386 இலக்க வேனை நாட்டில் எங்கு கண்டாலும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். 57 - 4386 இலக்க வேனை நாட்டில் எங்கு கண்டாலும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். Reviewed by Madawala News on November 19, 2020 Rating: 5