தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ட்ரோன் சுற்றிவளைப்பில் 117 பேர் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ட்ரோன் சுற்றிவளைப்பில் 117 பேர் கைது.

 ட்ரோன் சுற்றிவளைப்பில் 117 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,

பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


24 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக தொடர்ந்து அமுலிலுள்ளன. இந்நிலையில், மேற்படி பிரதேசங்களில் நேற்று (19) மாலை விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 


இதற்கமைவாக 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 46 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


முகக்கவசம் அணியாது வீதியில் சுற்றித்திரிந்தவர்கள், சமூக இடைவெளியைப் பேணாதவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் ஒக்டோர் 30ஆம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 358 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக. சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ட்ரோன் சுற்றிவளைப்பில் 117 பேர் கைது. தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ட்ரோன் சுற்றிவளைப்பில்  117 பேர் கைது. Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5