அமைச்சர் நாமலின் விஷேட செயலாளர் என்ற போர்வையில் பண மோசடி. - Madawala News Number 1 Tamil website from Srilanka

அமைச்சர் நாமலின் விஷேட செயலாளர் என்ற போர்வையில் பண மோசடி.( அன்சார்.எம்.ஷியாம் )
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
நாமல் ராஜபக்ஷ அவர்களின் வடமாகாண விஷேட செயலாளர் என்ற போர்வையில் கெக்கிராவைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பணமோசடி மற்றும் ஒழுக்கயீனச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் இவ்வாறான நபர் குறித்து அவதானமாக இருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

குறித்த நபர் மன்னார்,முசலி,கல்முனை,மருதமுனை,அட்டாளைச்சேனை,மட்டக்களப்பு என்று பல்வேறு பிரதேசங்களில் உலவி வருவதாகவும் அரசாங்கத்தில் தொழில் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.

மேற்படி நபரின் மோசடி நடவடிக்கையில் பாதிக்கப் பட்டு பணத்தைப் பறி கொடுத்ததாக சொல்லப் படும் ஒருவர் மடவளை நியூஸ்க்குத் தெரிவிக்கையில் - தானும் தன்னுடன் இணைந்து இம்மோசடியில் பாதிக்கப் பட்ட மேலும் இருவரும் குறித்த நபர் குறித்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மேலும் இது குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்குக் கடிதம் ஒன்றின் மூலம் தெரிவுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, நாம் அமைச்சரின் சட்ட ஆலோசகர் ஷிபான் மஹரூப் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவிய போது - மேற்படி சம்பவம் தொடர்பாக அமைச்சர் தனக்கு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பணித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் நாமலின் விஷேட செயலாளர் என்ற போர்வையில் பண மோசடி. அமைச்சர் நாமலின் விஷேட செயலாளர் என்ற போர்வையில் பண மோசடி. Reviewed by Madawala News on October 17, 2020 Rating: 5