மாணவி ஒருவருக்கு தந்திரமான முறையில் விடை சொல்லிக் கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர் கைது . - Madawala News Number 1 Tamil website from Srilanka

மாணவி ஒருவருக்கு தந்திரமான முறையில் விடை சொல்லிக் கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர் கைது .


க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவி ஒருவருக்கு தந்திரமான முறையில் விடை சொல்லிக் கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாதுவ மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற பொறியியல் தொழிநுட்ப பரீட்சையில் தோற்றிய மாணவர் ஒருவருக்கு பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் தந்திரமான முறையில் விடை சொல்லிக் கொடுத்துள்ளார்.

இதனை அவதானித்த பதில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

இதனையடுத்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பெண் பரீட்சாத்தி தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி ஒருவருக்கு தந்திரமான முறையில் விடை சொல்லிக் கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர் கைது . மாணவி ஒருவருக்கு தந்திரமான முறையில் விடை சொல்லிக் கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர்  கைது . Reviewed by Madawala News on October 18, 2020 Rating: 5