கருப்பு ஒக்டோபரின் வயது முப்பது.



அக்பர் அஹ்ஸன், நியுயோக்கிலிருந்து,,,,,,,,,,

        1990 ஆம் ஆண்டு அக்டோபரில் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி

இந்த  வருடத்துடன் 30 ஆண்டுடன் ஆகின்றன. இது ஒரு தமிழீழ விடுதலை புலிகள் (எல்.டி.டி.இ) அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புச் செயலாகும்.


    உண்மையில் கருப்பு ஒக்டோபர் 1990 இன் கருப்பு  ஆகஸ்டிலிருந்து ஆரப்பிக்கிறது,  பிரிவினைவாதத்திற்கான தமிழ் போராட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் குழுக்களில் இணைந்து போரிட்டனர், இருப்பினும் கிழக்கில் பெரிம்பான்மை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் வன்முறை மோதல்களுக்கும் சம்பவங்களுக்கும் உயர்ந்தன. இதனால் கிழக்கில் 1990 ஆகஸ்ட் 3 ஆம் தேகதி கத்தான்குடியில் முஸ்லீம் தொழுகையாளிகளையும், ஆகஸ்ட் 11, 1990 அன்று எராவூரில் தூங்கும் கிராமவாசிகளையும் புலிகள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்தனர். மேழும் முழு கிழக்கிலும் முஸ்லிம்கள் மீது  எல்.ரீ.ரீ.ஈ பரவலான படுகொலைகள், அட்டூழியங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இதே நேரம் வடக்கில் முற்றிலும் வேறுபட்ட சூழல் காணப்பட்டது. இரு சமுகமும் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல வாழ்தனர்.  எனினும் கிழக்கு புலிகளின் அழுத்ததால் தமிழீழத்திற்கு முஸ்லிம்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற பேலியான குற்றச்சாட்டின் பேரில் புலிகள் சுமார் 75,000 முஸ்லீம் மக்களை வடக்கு மாகாணத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.


 


                      முதல் வெளியேற்றம் யாழ்ப்பாணத்தில்  30 அக்டோபர் 1990 இல்  எல்.டி.டி.இ தெருக்களில் ஓடியபோது முஸ்லீம் குடும்பங்களை உஸ்மானியா கல்லூரியில் கூட்டிச் செல்லுமாறு கட்டளையிட்டனர். அங்கு, இரண்டு மணி நேரத்திற்குள் வலுக்கட்டாயமாக வெளியேறும்படி அவர்களிடம் கூறப்பட்டது, மீறுவோர் சுடப்படுவர் என அச்சுருத்தப்பட்டனர். அத்தோடு முழு முஸ்லீம் மக்களும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். 1981 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யாழ்ப்பாணத்தில் மொத்த முஸ்லிம் மக்கள் தொகை 15000 ஆகும். மேழும் முழு வடக்கு மாகாணத்திலிருந்து சுமார் 75,000 பேர் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வலுக்கட்டாயமாக  வெளியேற்றப்பட்டனர்.  இதில் மன்னாரில் இருந்து 40,000 பேர், யாழ்ப்பாணம் மற்றும் கிளினோச்சியைச் சேர்ந்த 20,000 பேர், வவுனியாவிலிருந்து 10,000 பேர் மற்றும் முல்லைதீவிலிருந்து 5,000 பேர் அடங்குவர் , இதனால் உடமை, உரிமை இழந்து பெரும் துண்பத்திற்கு மத்தியில்  பெரும்பாளானோர் புத்தளம் தச்சம் அடைந்தனர், இவர்களுக்கு இடம் அளித்த புத்தள மக்களுக்கு மறுமை வரைக்கும் நண்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.


       யுத்தம் முடிந்த பின்பும் கூட மீள்குடியேற முஸ்லீம்கள் தயக்கம் காட்டுகின்றனர்,ஏனெனில் வெளியேற்றமானது இம்முஸ்லிம்களிடையே கசப்பான நினைவுகளை இன்னும் கொண்டுள்ளது.


அக்பர் அஹ்ஸன்.

நியுயோக்கிலிருந்து

கருப்பு ஒக்டோபரின் வயது முப்பது.  கருப்பு ஒக்டோபரின் வயது முப்பது. Reviewed by Madawala News on October 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.