ஸஹ்ரான் குழுவினர் ( ஹனீபா முகமது அக்ரம் ) பயன் படுத்திய கார் தற்போது மீட்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஸஹ்ரான் குழுவினர் ( ஹனீபா முகமது அக்ரம் ) பயன் படுத்திய கார் தற்போது மீட்பு.உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு
 தடுப்புகாவலில் உள்ள முகமது ஹனீபா முகமது அக்ரம் பயன்படுத்தி வந்த கார் ஒன்றை காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் (16) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மீட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்தவரும் ஏப்ரல் 25 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு மெனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முகமது ஹனீபா முகமது அக்ரம் பெயரில் வாங்கப்பட்ட பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த கார் மறைத்து வைக்கப்பட்டிருந்தது
இதனையடுத்து மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில் என்.அன்பரசன், அருள்குமார், பந்துல, சரோன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்தில் கார் தரிப்பிடம் ஒன்றில் கார்மூடும் தரப்பாலால் மூடி மறைத்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வைத்திருந்த நிலையில் காரை மீட்டுள்ளனர்.


இந்த காரில் காத்தான்குடியில் இருந்து நுவரெலியா பயிற்றி முகாமிற்கு பயிற்சிக்காக பயிற்சியாளர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற விசாரணையில் குறித்த விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மீட்கப்பட்ட காரை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் .


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஸஹ்ரான் குழுவினர் ( ஹனீபா முகமது அக்ரம் ) பயன் படுத்திய கார் தற்போது மீட்பு. ஸஹ்ரான் குழுவினர் ( ஹனீபா முகமது அக்ரம் ) பயன் படுத்திய கார் தற்போது மீட்பு. Reviewed by Madawala News on October 17, 2020 Rating: 5