மீழாத் விழா காணொளி போட்டி



நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறப்பை முன்னிட்டு  பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை Zoom இல் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தேசித்துள்ளது. இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தில்? அன்னாரது பிறப்பை முன்னிட்டும் வீடுகளில் விடுமுறையில் இருக்கின்ற மாணவ மாணவிகளது திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்குமான ஒரு முயற்சியாக போட்டி நிகழ்ச்சிகள் பலதை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது. 

அதனடிப்படையில் கிராஅத், அல் குர்ஆன் மனனம் போன்றவை மாணவர்களுக்கும் அதான் சொல்லுதல் மாட்டி சிறந்த முஅத்தின் தெரிவுக்காகவும் பகீர் மாவா பாட்டு | கஸீதா பாடல் போன்றவை கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் நடாத்த உத்தேசிக்கப் பட்டுள்ளன. இப்போட்டி நிகழ்ச்சிகளை Zoom இல் நடாத்தி, வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. போட்டி நிகழ்ச்சிகள் தொடர்பான மேலதிக தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.
மீழாத் விழா காணொளி போட்டி மீழாத் விழா காணொளி போட்டி Reviewed by Madawala News on October 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.