எதிர்வரும் ஆண்டுகளில் செயற்படுத்தப்படும் பாரியளவிலான பல அபிவிருத்தி திட்டங்களின் விபரம்.

• கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டம் ஆரம்பம்...


• அரச பொறிமுறையின் மூலம் வழங்கப்படும் சலுகைகளை கிராமத்திற்கு கொண்டு செல்லும் சவாலை வெற்றிக்கொள்ள தயார்....


• பல்வேறு பிரிவுகளின் கீழ் பாரியளவிலான பல அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் செயற்படுத்தப்படும்....


´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கை திட்டத்தை செயற்படுத்தி ஜனாதிபதி செயலணி மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிநடத்தலின் கீழ் அமைச்சரவை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் ஒன்றிணைந்து ´கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டம்´ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி செயலணிக்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த முன்வொழிவொன்றுக்கு அமைய செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் புதிய அரசாங்கத்தினூடாக கிராம மக்களுக்கு நேரடியாக மற்றும் விரைவாக நலன்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் செயற்படுத்தப் படுகிறது.


கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட பிரதான 04 குழுக்களின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் உத்தியோகப்பூர்வ பணிகள் இன்று (27) முற்பகல் அநுராதபுரம் வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


´சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு´ 03 அமைச்சரவை அமைச்சுக்களையும், 09 இராஜாங்க அமைச்சுக்களையும் கொண்டுள்ளது.


• அமைச்சரவை அமைச்சுக்கள்

1. கல்வி அமைச்சு

2. சுகாதார அமைச்சு

3. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு



• இராஜாங்க அமைச்சுக்கள்

1. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சு

2. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சு

3. திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சு

4. அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சு

5. வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைத்துவ இராஜாங்க அமைச்சு

6. கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு

7. சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு

8. தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு

9. கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு



கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தில் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் உத்தியோகப்பூர்வ பணிகளை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சுக்களின் செயற்பாடுகளை அரச பொறிமுறையின் கீழ் கிராம மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான ஒருங்கிணைப்பிற்காக இந்த 04 குழுக்களும் செயற்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,


மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் ஊடாக அடையாளம் காணப்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அத்துடன், கிராமிய பொருளாதார அபிவிருத்திக்காக 2021 வரவு செலவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், மாவட்ட அபிவிருத்தி குழுக்களினூடாக அடையாளம் காணப்பட்ட 04 துறைகளின் ஊடாக தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நாட்டிற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து மதிப்புமிக்க செயற்பாடுகளையும் அநுராதபுரத்திலிருந்து ஆரம்பிப்பது ஜயஸ்ரீ மஹாபோதியின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கிலாகும். ஒவ்வொரு அமைச்சுக்களினதும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான வரவு செலவு திட்டத்தினூடாக அநுராதபுரம் மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்த கண்ணோட்டம் இதுவரை கிடைத்திருக்கும்.


அந்தந்த அமைச்சுக்களுக்கு சொந்தமான துறைகளின் கீழ் வடமத்திய மாகாணத்திற்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்காக செயற்படுத்தப்படும் திட்டங்களை முன்வைத்து, அவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்ட விடயமாக இராஜாங்க அமைச்சர்களுக்கு துறைகளை பகிர்ந்து வழங்குவதற்கும், ஒவ்வொரு இராஜாங்க அமைச்சகத்திலும் கிராம அளவில் செய்யக்கூடிய பணிகளை தீவிரமாக செயல்படுத்தவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


இதுவரை மக்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சங்கடப்படுத்திய பிரச்சினைகளில் ஒன்று, மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க அநதந்த துறைக்கு பொறுப்பான ஒரு நிறுவனம் இல்லாமை. இன்று அவ்வாறு இல்லை, ஏனென்றால் ஒவ்வொரு துணைப் பிரிவிற்கும் பொறுப்பான அரசியல் அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதியும் ஒரு இராஜாங்க பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நன்மைகளை அரசு பொறிமுறையின் மூலம் கிராமத்திற்கு கொண்டு செல்வதே இப்போது எங்களுக்கு உள்ள சவால். அனைத்து அமைச்சகங்களையும் பார்க்கும்போது, கிராம மட்டத்தில் அரசு பொறிமுறை செயல்பட்டு வரும் ஒரு சில அமைச்சுகள் மட்டுமே உள்ளன. பிற அமைச்சகங்களுக்கு நோக்கம் மற்றும் திட்டங்கள் இருந்த போதிலும், அவற்றை கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறை இல்லை. ஒவ்வொரு அமைச்சகத்திலும் கிடைக்கும் நிதி, கிராமத்தை அடைவதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து அரசு பொறிமுறைகளை சிறப்பாகப் பயன்படுத்துவது நமது பொறுப்பு.


நியமிக்கப்பட்ட நான்கு குழுக்கள் அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் சென்று கிராம அபிவிருத்தியில் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவும், பொருத்தமான உத்திகளை வகுக்கவும், அடுத்த சில ஆண்டுகளில் பல பகுதிகளில் ஏராளமான அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


குறித்த சந்தர்ப்பத்தில் ´சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் குழுவின் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் ஆண்டுகளில் செயற்படுத்தப்படும் பாரியளவிலான பல அபிவிருத்தி திட்டங்களின் விபரம்.  எதிர்வரும் ஆண்டுகளில் செயற்படுத்தப்படும் பாரியளவிலான பல அபிவிருத்தி திட்டங்களின் விபரம். Reviewed by Madawala News on October 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.