அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் புதிய சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிபான் மஹரூப் (AAL)



( அன்சார் எம்.ஷியாம்

சட்டத்தரணி ஷிபான் மஹரூப், இளைஞர் மற்றும் விளையாட்
டுத்துறை 

அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் சட்ட ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார்.

சட்டத்துறையிலும் அதேவேளை அரசியல் துறையிலும் துடிப்புடன் செயற்படுவர் இளம் சட்டத்தரணி ஷிபான் மஹரூப் மும்மொழிகளிலும் பாண்டித்துவம் பெற்றவராகவும் காணப்படுகின்றார்.

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மஹ்ரூப் மற்றும் உம்மு ஹுசைமா ஆகியோரின் 2 வது புதல்வராவார்

தனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்பது வரை சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் கற்ற இவர்
உயர்தரத்தினை மருதமுனை க/மு அல்மனார் மத்திய கல்லூரியில் பயின்றவராவார்.

2010 ஆம் ஆண்டு தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் சமூகப் பணிக்கான கலைமாணிப் பட்டத்துடன் தனது கல்வியல் வாழ்வினை ஆரம்பித்த இவர்,வ2011 முதல் 2013 வரை நோர்வே அகதிகள் பேரவையின் மன்னார் மாவட்ட திட்ட முகாமைத்துவ அதிகாரியாகக் கடமை புரிந்துள்ளார்

2013 இல் சட்டக் கல்லூரிக்குத் தெரிவாகி, தனது கற்கை நெறிகளை சிறப்புற நிறைவேற்றியவாறே சட்டக் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியின் தலைவராகவும் பிரகாசித்ததோடு, சட்டக்கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் இணைப்பாளராகவும் செயல் பட்டார்.

2017 இல் சட்டப் படிப்பை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ததற்கிணங்க அதே ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இவர், தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமுதுமாணி கற்ககையினை தொடர்கிறார்.

மேற்படி நியமானது கடந்த 05.10.2020 ம் திகதி அமைச்சரினால் வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது பணி சிறப்புற அமைய மடவளை நிவ்ஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் புதிய சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிபான் மஹரூப் (AAL) அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் புதிய சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிபான் மஹரூப் (AAL) Reviewed by Madawala News on October 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.