அக்குறணை பிரதேச சபையின் 2021 வருடத்திற்கான வரவு செலவு திட்டம் மேலதிக 14 வாக்குகளால் வெற்றி



அக்குறணை பிரதேச சபையின் எதிர்வரும் 2021 வருடத்திற்கான
 வரவு செலவு திட்டம் இன்று  (27.10.2020) இடம்பெற்ற விசேட பிரதேச சபை கூட்டத்தில் மேலதிக 14  பெரும்பான்மை வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது

அக்குறணை பிரதேச சபையின் விசேட பொதுக்கூட்டம் இன்று  (27.10.2020) மு.ப 9.30 மணிக்கு அளவதுகொடையில் அமையப்பெற்றுள்ள அக்குறணை பிரதேச சபையின் பிரதான கட்டிடத்தொகுதியில் பிரதேச சபையின் தலைவர் இஸ்திஹார் இமாதுதீன் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது பிரதேச  தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன்  பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சனானதொரு நாட்டை கட்டியெழுப்பும் செயற்திட்டத்திற்கு இணைந்ததாக பிரதேசத்தில் சிறந்த பல்துறையிலும் பொருளாதார விருத்தி அடைந்த பிரதேச சபையாக மாற்றும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் பிரதே சபையின் எதிர்வரும் வருடத்தின் வருவாயாக  ரூபா 922,84,039.39 எதிர்பார்க்கப்படுவதாகவும் மற்றும் பல்துறை அபிவிருத்திக்கான செலவினமாக ரூபா 922,83,076.31 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்
பிரதேச சபையின் தலைவர்   இஸ்திஹார் இமாதுதீன்  வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில் தெரிவித்தார்

"கடந்த 25 வருடத்திற்கு மேல் காணப்பட்டு வந்த திண்ம கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கண்டதுபோன்று எதிர்வரும் வருடத்தில் உக்கலடையும் குப்பை கழிவூகளுக்கான புதியதொரு தொழிநுட்பத்தின் மூலமாக நிரந்தரத் தீர்வை 2021 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்குவதற்காக பாரிய திட்டமொன்ரையுன் முன்னெடுக்க உள்ளோம்"

இதன்போது பிரதேச சபையின் ஐ.தே.க உறுப்பினர் மொஹமட் சரூக் வரவு செலவு திட்டத்தை வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கவே குறித்த வரவு செலவு திட்டம் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது

2021 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன இதனடிப்படையில் 2021 வரவு செலவு திட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன்  உத்தியோகபூர்வமாக சபையில் அறிவித்தார்

"2020 ஆம் ஆண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அக்குறனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கிய அதிமேதகு கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும், தனது மூன்றாவது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை முன்வைத்து வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து நிறைவேற்றுவதற்கு ஒத்துழைத்த பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அத்துடன் பிரதேச சபை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனவும் அத்துடன 2021 ஆம் வருட
புத்தாண்டுக்கு  முன்கூட்டியே அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டினார் 

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் பிளவுபட்டு வாக்களித்ததுடன் ஐ.தே.கட்சி பிரதேச சபை உறுப்பினர் நிரன்ஞன் கருனாரத்ன உரையாற்றுகையில் ஏனைய ஐ.தே. கட்சி பிரதேச சபை உறுப்பினர் தாம் ஏன் வரவு செலவு திட்டத்தை எதிர்க்கிறோம் என்று தெரியாமல் எதிர்ப்பதாகவும், நியாயமான காரணமின்றி அவ்வாறு எதிர்ப்பது தவறு என சுட்டிக்காட்டியும் வரவு செலவு திட்டத்தை ஆதரித்தும் உரையாற்றினார்

அக்குறணை பிரதேச சபையின்  வரவு செலவு திட்ட விவாதத்தின்போது 
எதிர்கட்சி தலைவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஆஜ்மீர் பாரூக் உரையாற்றுகையில் 2021 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தாலும் அதில் குறைபாடுகள் காணப்பட்டாலும் அவற்றை திருத்திக்கொண்டு வரவு செலவு திட்டத்தை முன்னெடுத்து செல்ல ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்

அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன்  இன்று வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய உரையின் சுருக்கம் வருமாறு

"கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட குப்பை கழிவுகளின் மீள் சூழற்சி பசளை திட்டமானது மக்களுக்கானதொரு சிறந்த திட்டமாக மட்டுமல்லாது அக்குறனை பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட ஏனைய பிரதேச செயலக பிரிவுகளின் குப்பை பிரச்சினைக்கான தீர்வாகவும் அமைந்தது பாராட்டதக்கதொரு விடயமாகும்.

அத்தோடு இவ்வருடத்திற்கான சுற்று சூழல் கொள்கைகளாக அக்குறனை பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட பிதேசங்கள் மற்றும் பிரதேச சபை எல்லைக்கு அண்மித்த தனியாருக்குச் சொந்தமான இடங்கள், நிறுவனங்களுக்கு உரித்தான இடங்களிலும் சேர்க்கப்படும் உக்காத குப்பைகள் மற்றும் திண்ம கழிவுகள் என்பவற்றுக்கான வரி அறவிடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

உக்கும் குப்பை கழிவுகலுக்கு புதியதொரு தொழிநுட்பத்தின் மூலமாக நிரந்தரத் தீர்வை 2021 ஆம் ஆண்டு மக்களுக்காக வழங்குவதற்காக பாரிய எதிர்பார்ப்பில் உள்ளோம்.

அக்குறனை பிரதேச சபையின் எதிர்காலம் சிறுவர்களின் தலைமுறையாகும். எனவே ஆரம்ப கல்வி அனுகூலங்களுக்கமைய தீகல பாலர் பாடசாலையினை அபிவிருத்தி செய்து அதன் பயனை நாளைய எதிர்கால சந்ததியினர்  வழங்குவதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்

அத்துடன் திப்பிடிய பாலர் பாடசாலையையும் எங்கள் பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னர் திப்பிடிய பாலர் பாடசாலையையும் அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சொத்துக்களின் உரிமையை, சொத்து உரிமையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒழுங்கமைப்புக் கோவைத் திட்டமொன்றை அமைப்பதற்கும் எண்ணியுள்ளோம்.

பிரதேச சபைகளில் மக்களுடன் மிக நெருங்கியத் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொண்டு மக்களுக்கான சிறந்த சேவையை வழங்கும் பிரதேச சபையாக அக்குறனை பிரதேச சபையை கூற முடியும். அந்த வகையில்  தவிசாளராகிய நான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  மக்கள் அனைவருக்குமான தன்னிகரற்ற அளப்பரிய சேவையை வழங்கவும் கடமைப்பட்டுள்ளோம்

எமது மக்கள் சேவை தொடர்ந்தும் மேற்கொள்ள 2021 ஆம் ஆண்டும் "கிராமங்களுக்கான பிரதேச சபை" எனும் தொனிப் பொருளின் கீழ் அனைத்து ஊர்களும் உள்ளடங்கும் வகையிலும் அவ்வூர்களுக்கான பல் துறை சேவைகளையும் கிராம அபிவிருத்திக்காக பாரிய ஒழுங்கு முறைத்திட்டங்களையும் வழங்க திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றோம்

இச்சபையின் மூலமாக வருடத்திற்கு திரட்டப்படும் வரிகள் மூலமாக கிடைக்கப்பெறும் தொகையானது எங்களின் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கான சேவைகளை செய்ய போதுமானதாக இல்லை, அதனால் இந் நிதிப்பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக பல நிதி நிறுவனங்கள், நலன்புரிச் சங்கங்கள் என்பவற்றின் உதவிகளையும் நாட வேண்டிய நிலையில் அவற்றின் அனுசரனைகளைப் பெற்றுக்கொண்டாலும் கூட அந்நிதியானது பொதுமானதன்று. இந்நிலையானது வருடாந்தம் பிரதேச சபையின் மூலம் மக்களிடமிருந்து அறவிடப்படும் வரி பணத்தை மீண்டும் மக்களின் சேவைகளுக்காகவே செலவு செய்வதானது நிதி பற்றாக்குறை காரணமாக பாரிய சவாலாகவே உள்ளது. இதனால் எமது பிரதேச சபையின் வருமான வழிகளை அதிகரித்து,
வரிகள் செலுத்தும் முறைகளையும் திட்டமிட்டு ஒரு உறுதியான வருமான அதிகரிப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலும, அனைவரினதும் ஒத்துழைப்புடனும் வெற்றியளிக்க கூடிய ஒரு பூரண வருடாந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளோம்.

பிரதேச சபையின் செயற்பாடுகளை முறையானதொரு வழியில் கொண்டு செல்லவும், எங்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்த உள்ளுராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இவ்வேளையில் கௌரவத்துடன் நினைவுப்படுத்திக்கொள்ள கடமைப்பட்டுள்ளதோடு,  கண்காணிப்பாளர் உட்பட அணைத்து நிர்வாக உத்தியோகஸ்தர்களையும் அவர்களின் ஒத்துழைப்புகளையும் பொறுமையுடனும், கௌரவத்துடனும் நினைவுப்படுத்திக்கொள்கின்றேன்.

பிரதேச சபை எல்லைக்குள் பிரதேச சபைக்கான ஆதரவையும் அணுசரனையையும் வழங்கிய கௌரவ பிக்குமார்களையும், இஸ்லாமிய மத தலைவர்களையும், இந்து மத குருமார்களையும் இவ்வேலையில் கௌரவத்துடன் நினைவுப்படுத்திக்கொள்வதோடு, அக்குறனையில் அணைத்து வேலைகளுக்கும் உதவியாக உள்ள அக்குறனை பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரியவர்கள், அலவத்துகொட பொலிஸ் நிலையம் உட்பட்ட அணைத்து அரசாங்க உத்தியோகஸ்த்தர்களையும், நலன்புரி சங்க உறுப்பிணர்களையும், ஊடகவியளாலர்களையும் அவர்களின் சேவைகளையும் நினைவுப்படுத்தி, அவர்களுக்கான கௌரவத்துடனான நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

2021 ஆம் ஆண்டு நாங்கள் செயற்படுத்த திட்டமிட்டுள்ள இந்த வருடாந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையை வெற்றிகரமானதாக மாற்றி, ஒரு சிறந்த உள்ளுராட்சி மன்றமாக அக்குறனை பிரதேச சபையினை நிறுபிக்க நீங்கள் அணைவரும் உங்கள் பூரண ஒத்துழைப்பையும் அணுசரனையும் நல்குவீர்கள் என தாழ்மையுடன் எதிர்பார்கின்றேன்."
அக்குறணை பிரதேச சபையின் 2021 வருடத்திற்கான வரவு செலவு திட்டம் மேலதிக 14 வாக்குகளால் வெற்றி அக்குறணை பிரதேச சபையின் 2021 வருடத்திற்கான வரவு செலவு திட்டம்  மேலதிக 14 வாக்குகளால் வெற்றி Reviewed by Madawala News on October 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.