அக்கரைப்பற்று, மன்பஉல் ஹைராத் அரபுக் கல்லூரியில், 14 மாணவிகள் பல்கலைக் கழகம் தேர்வு.



(இர்ஷா ஜமால்)

கடந்த வருடம் (2019) நடைபெற்று  முடிந்த கா.பொ.(உ/த) பரீட்ச்சைக்கு ஹைராத் பெண்கள் அரபுக்

கல்லாரியின் நான்காம் தொகுதி மாணவிகள் 24  பேர் தோற்றி இருந்தனர்.


வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் கல்லூரியின், பரீட்சை சித்தி வீதமானது100%ஆகும்.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 14 மாணவிகள் தமது உயர் கல்வியை இலங்கை பல்கலைக் கழகத்தில் தொடர்வதற்கு தேர்வாகி உள்ளனர்.


கலைப் பிரிவிற்கு  ஏழு மாணவிகளும், இஸ்லாமிய நாகரீக கற்கை நெறிகளுக்கு நான்கு மாணவிகளும், அரபு மொழித் துறைக்கு மூன்று மாணவிகளுமாக மொத்தம் 14கு  மாணவிகள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியுள்ளனர்.


மாணவிகளது இம்மகத்தான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த  ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சக மாணவிகள், மாணவிகளினதும், கல்லூரியினதும் வளர்ச்சிக்கும், முன் னேற்றத்திற்கும் அயராது தங்களை அர்ப்பணம் செய்து கொண்டிருக்கும் கல்லூரியின் ஆளுநர் சபையினர், மற்றும் கல்லூரியின் நலனில் அக்கறை செலுத்தும் நல்லுள்ளம் கொண்ட எல்லோருக்கும் தனது நன்றியை தெரிவித்தார், கல்லூரியின் அதிபர் அஷ் ஷைஹ் இர்ஷாத் (இஸ்லாஹி) அவர்கள்.

அக்கரைப்பற்று, மன்பஉல் ஹைராத் அரபுக் கல்லூரியில், 14 மாணவிகள் பல்கலைக் கழகம் தேர்வு. அக்கரைப்பற்று, மன்பஉல்   ஹைராத் அரபுக் கல்லூரியில், 14 மாணவிகள் பல்கலைக் கழகம்  தேர்வு. Reviewed by Madawala News on October 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.